Breaking News
நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார்.
இறுதிவரை உறுதியுடன் தமிழுக்காக குரல் கொடுத்தவர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் காலமாகி உள்ளார்.
நம் மத்தியில் வாழ்ந்த
நம் வரலாற்று நூலகம் ஒன்று
நம்மை விட்டு மறைந்துள்ளது.
அவருடைய சில பணிகள் குறித்து விமர்சனம் இருப்பினும்
அவரது இன உணர்வில் என்றுமே சந்தேகம் ஏற்பட்டதில்லை.
இறுதிவரை உறுதியுடன் எமக்காக குரல் கொடுத்தவர்
இனி அந்த கலகக்குரைல கேட்க முடியாது. அடங்கிவிட்டது.
2004 நாடாளுமன்றத் தேர்தலில் ஈழவேந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு நாடாளுமன்றம் சென்றார். மூன்று மாதங்களுக்கு மேலாக நாடாளுமன்றம் செல்லாமையினால் 2007 நவம்பரில் அவரது பதவி பறி போனது. மேலும் அவர் கனடாவில் வசித்து வந்த போது உடல்நிலை பாதிப்பான காரணத்தினால் கனடா ரொரன்ரோ வைத்திற சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானார். இறக்கும் போது அவருக்கு 91. வயது