Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பலதும் பத்தும்:- 04,05,2025 - இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை

பாக்கு நீரினை கடல் பகுதியில் கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

இந்திய துறைமுகங்களில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த கப்பல்கள் நுழையத் தடை விதிக்கப்படுவதாக இந்தியமத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, இந்தியாவில் உள்ள துறைமுகங்களில் பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் நுழையத்தடை விதிக்கப்படுவதாக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சகம்கூறியுள்ளது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்!

வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஏற்பாடு செய்த வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவனது பிரிவுபசார நிகழ்வு ஆளுநர்செயலகத்தில் இன்று சனிக்கிழமை (03) வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் அவர் தம் பாரியார் ஆகியோர் ஆளுநர் செயலக ஊழியர்களால்வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். அத்துடன் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன், ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், ஆளுநர் செயலக கணக்காளர் சோ.பிரபு, ஆளுநரின் இணைப்புச் செயலாளர்களான எந்திரி அ.எ.சு.ராஜேந்திரா மற்றும் சர்வானந்தா, ஆளுநரின் ஊடகச் செயலர் கு.டிலீப்அமுதன் ஆகியோர் வடக்கு மாகாண பிரதம செயலரின் சேவையைப் பாராட்டி உரையாற்றினர். வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன் தனது 34 ஆண்டுகால அரச சேவையில் பல்வேறு கௌரவ ஆளுநர்களின் கீழ்ஆளுநரின் செயலாளராக 7 ஆண்டுகள் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாக்கு நீரினை கடல் பகுதியில்  கடற்கொள்ளையர்கள் தாக்குதல்.

தமிழ்நாடு மாநிலம் நாகையில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது இலங்கைகடற்கொள்ளையர்கள் தாக்குதல்; ஒரே நாளில் 3 இடங்களில் கடற்கொள்ளையர்கள் தாக்கியுள்ளதாக தகவல். அக்கரைப்பேட்டை, செருதூர், வெள்ள பள்ளம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுஉள்ளதாகவும் (10க்கும் மேற்பட்ட மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகளை நீக்கி நிதி அமைச்சு புதிய வர்த்தமானி அறிவிப்பைவெளியிட்டுள்ளது. 

நிதி திட்டமிடல்

நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சர் என்ற முறையில், இந்த வர்த்தமானி அறிவிப்பை ஏப்ரல்29 முதல் அமலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனூடாக, இறக்குமதி செய்யப்பட்டும் பல்வேறு காரணங்களால் விடுவிக்க முடியாமல் துறைமுகத்தில் காணப்படும்பல வகையான கார்களை விடுவிக்க முடியுமென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விளக்கமளித்த இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் பிரசாத் மானகே, 

“ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களாக இந்த வாகனங்களை எங்களால் விடுவித்துக்கொள்ள முடியவில்லை. Hybrid Toyota Raize மற்றும் Hybrid Nissan X-TRAIL புதிய வர்த்தமானி வௌியிட்டதன் காரணமாக, இப்போதுஅவற்றை பெற்றுக்கொள்ள முடியும். இதேபோல், இந்த தொழில்நுட்பத்தின் கீழ் வரும் ஏனைய வாகனங்களையும்பெற்றுக்கொள்ள முடியும்.” மேலும் பதிவு செய்யப்படாத புதிய மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்வதற்குவிதிக்கப்பட்டிருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

உயிருக்கு அச்சுறுத்தல்கள்!

தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு முன்னாள் பொலிஸ்மா அதிபர்தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று (01) பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவிடம் இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலம்முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் மறைந்திருக்கும் குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானை இம்ரான், பதவியில் இருந்து இடைநீக்கம்செய்யப்பட்ட தேசபந்து தென்னகோனை கொலை செய்வதாக மிரட்டியதாக சமீபத்திய நாட்களில் செய்திகள்வெளியிடப்பட்டன. 

இந்நிலையில், தனது பாதுகாப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டதால், தனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு தேசபந்து தென்னகோன் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தீவிரவாத  தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான்  முழுவதும் உள்ள  வானொலி நிலையங்களில் இந்திய பாடல்களை ஒலிபரப்ப தடை விதித்து பாகிஸ்தான் ஒளிபரப்பாளர்கள் சங்கம் (PBA) உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் அரசின் தகவல் தொடர்புத்துறை மந்திரி அட்டாவுல்லா தரார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர்!

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நேற்று வியாழக்கிழமை இரவு இறையடிசேர்ந்தார். கொழும்பில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் இன்று (02) மாலையேநடைபெறவுள்ளன.

தேர்தல் பிரச்சாரம் செய்வது தொடர்பில் தேர்தல்கள்ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளைய தினம் (03) நள்ளிரவுடன்நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதால், வாக்கெடுப்பு நடாத்தப்படுவதற்கு 48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக்குழுக்கள், வேட்பாளர்கள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்து கொள்ள வேண்டுமென தேர்தல்ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி நாளைய தினம் நள்ளிரவுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடையவுள்ளது. தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னரான காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவோருக்கு எதிராகசட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.