திட்டமிட்டு அரிசித்தட்டுப்பாட்டை ஏற்படுத்திய மாபியாக்குழு!
.
அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் திட்டமிட்டு நாட்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.மேலும், அரிசி இறக்குமதி விவகாரத்திலும் பாரிய மோசடிக்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று(07) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனை குறிப்பிட்டிருந்தார்.இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,‘‘தேவைக்கு அதிகமாக அரிசி இறக்குமதி செய்யப்படுவதால் அடுத்த அறுவடையின்போது விவசாயிகளுக்கு நியாயமான விலையில் நெல்லை விற்பனை செய்ய முடியாத அபாயம் காணப்படுகின்றது.
காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாகவே தேங்காய் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆனால், அரிசி தட்டுப்பாடு அரிசி ஆலை உரிமையாளர்களின் மாபியாக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இவர்கள் நெல் மற்றும் அரிசி என்பவற்றை மறைத்து வைத்திருக்கின்ற நிலையில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மற்றும் அரிசியின் அளவை அரசாங்கத்தால் இலகுவாக கண்டுபிடிக்க முடியும்.