Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மூன்று மாதத்திற்கு முன் மரணித்தாக நினைத்த சிறுவன் உயிருடன்!

15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குடும்பத்தினர் கண் முன்னே கடல் நீரில் மூழ்கினர்.

மூன்று மாதத்திற்கு முன் மரணித்தாக நினைத்த சிறுவன் உயிருடன்! 
​சுமார் 3 மாதங்களுக்கு முன்பு, 15 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் பாணந்துறை கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் கண் முன்னே நீரில் மூழ்கினர்.  ​சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் இரண்டாவது சிறுவனைப் பல நாட்கள் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், குடும்பத்தினர் அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தி, கத்தம் ஓதி துஆவும் செய்தனர்.

​இந்நிலையில், நேற்று அந்த இரண்டாவது சிறுவனின் பெற்றோருக்கு மலேசியாவிலிருந்து ஒரு  தொலை பேசி  அழைப்பு வந்தது. ​கடலில் மயக்க நிலையில் மிதந்து கொண்டிருந்த அந்தச் சிறுவனை  அவ்வழியால் பயணம் செய்த ஒரு சரக்குக் கப்பல் ஊழியர்கள் மீட்டுள்ளனர். கடந்த 3 மாதங்களாக மலேசியாவில் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. தற்போது அவருக்குப் பழைய நினைவுகள் திரும்பியவுடன், அவர் தனது பெற்றோரைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.