Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் - நேரில் சென்ற நல்லூர் தவிசாளர் தலைமையிலான குழு!

உரிய தொழில் உபகரணங்கள் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி கடற்தொழில் செய்வோர் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதிக்கு திங்கட்கிழமை (23) நல்லூர் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். 

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பூம்புகார் பகுதி மக்கள் உரிய அடிப்படை வசதிகள் இன்றி, பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வாழ்ந்து வருகின்றனர். 

குறிப்பாக கடற்தொழில் செய்வோர், உரிய தொழில் உபகரணங்கள் இன்றியும் , மீன் பிடி துறைமுக வசதிகள், படகுகளை நிறுத்தி வைப்பதற்கான உரிய வசதிகள் இன்றி சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்  

இது தொடர்பில் பூம்புகார் கடற்தொழில் சங்க பிரதிநிதிகளின் அழைப்பினை ஏற்று , நல்லூர் பிரதேச சபை தவிசாளர் ப. மயூரன் , உபதவிசாளர் ஜெயகரன், யாழ். மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் மற்றும் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வ. பார்த்தீபன் ஆகியோர் நேரில் சென்று அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்டனர். 

அப்பகுதி மக்களின் குறைகளை தீர்க்க விரைந்து தம்மால் முடிந்த நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என உறுதி அளித்துள்ளனர்.