Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

3 ஓட்டங்களை இழந்து 5 விக்கெட்டுகளை வசமாக்கிய பாகிஸ்தான் வீரர்!

.

பாகிஸ்தான் (Pakistan) அணிக்கு எதிரான இரண்டாவது 20க்கு20 போட்டியில் சிம்பாப்வே அணி 57 ஓட்டங்களில் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

இங்கு, பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளராகிய சுபியான் 3 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சிம்பாப்வேக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள பாகிஸ்தான் அணி, ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் முதல் 20க்கு20 போட்டியிலும் வெற்றி பெற்றது.

இந் நிலையில், தொடரை தீர்மானிக்கும் இரண்டாவது 20க்கு 20 போட்டியில், இன்று முதலில் துடுப்பாடிய சிம்பாப்வே அணியின் தொடக்க வீரர் பிரியான் பெண்ணட் 14 பந்துகளில் 21 ஓட்டங்களை எடுத்தார். மற்றொரு ஆரம்ப வீரராகிய டடிவானாசி மருமாணி 16 ஓட்டங்களை பெற்றார்.

ஆயினும், இதனை எத்து களம் இறங்கிய மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டம் இழந்தனர்.இந் நிலையில், 58 ஓட்டங்களை பெற்றால், வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானிய அணி, 5.3 ஓவர்களில் வெற்றி இலக்கை விக்கெட் இழப்பின்றி எட்டி தொடரை வென்றது.

அதேவேளை, இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20க்கு 20 போட்டி வரும் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இதனை தொடர்ந்து எதிர்வரும் பத்தாம் திகதியன்று, பாகிஸ்தானிய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்கு மூன்று 20க்கு 20 போட்டிகள், மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.