Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கவிருந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபவித்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

வெருகலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கவிருந்த சமூக செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்.

திருகோணமலை வெருகல் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை முன்னெடுக்க முயன்ற சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்கு இரவோடு இரவாக சென்று, நிகழ்வை தடுக்கும் வகையில் பொலிஸார் அச்சுறுத்தியுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் அப்பாவி பொது மக்கள் அனுபவித்த வலிகளை நினைவுகூரும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை வெருகல் பகுதியில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலர் இன்றைய தினம் (16) நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணிக்குப் பின்னர், இந்த சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளுக்குச் சென்ற ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் அந்த நபர்களிடம், தடை உத்தரவு பெறப்பட்டிருப்பதாகக் கூறி தடை உத்தரவை வழங்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் உட்பட பலரது பெயர்களையும் வாசித்து காண்பித்ததாகவும் தெரிய வருகின்றது.

‘தடையை மீறி நிகழ்வை முன்னெடுப்பீர்களாக இருந்தால் கைது செய்யப்படுவீர்கள்’ எனவும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் குறைந்தது 6 மாதங்களுக்கு பிணை எடுக்க முடியாத அளவுக்கு வழக்கு பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியதாகவும் தெரியவருகிறது.

அத்துடன், கடந்த காலங்களில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி பரிமாறும் நிகழ்வை தாங்கள் தடுக்கவில்லை எனவும் தற்போது அதனை தடுக்கவேண்டிய அழுத்தம் இருப்பதாகவும் அதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.