கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தினரால் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
3ஆண்டுகளை கடந்தும் கடிதத்திற்கு பதிலளிக்க தாமதித்து வரும் பிரதேச செயலாளர்.
3ஆண்டுகளை கடந்தும் கடிதத்திற்கு பதிலளிக்க தாமதித்து வரும் பிரதேச செயலாளர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
குறித்த கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் தமது அங்கத்தவர்களில் ஒருவரது கரைவலை விசமிகளால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கும், இன்னும் இருவருக்கு கடற் பாறையில் கிழிவடைந்து சேதமடைந்த கரவலைகளுக்குமாக தமது சொந்த நிதியிலிருந்து கடன் கொடுப்பதற்க்காக பொதுச் சபைக் கூட்டத்தின் ஏக மனதான தீர்மானம் நிறைவேற்றி யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளருக்கு அனுமதிக்காக கோரிக்கை கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் பிரரபாகரமூர்த்தியின் அனுமதிக்கு அனுப்பியுள்ளதாக குறித்த கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு பதில் அனுப்பியுள்ளார்.
ஆனால் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் இதுவரை அனுமதி வழங்காததால் குறித்த கடன் வழங்குவதற்க்கான அனுமதியை வழங்க முடியவில்லை என்று கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகதில் தகவல் அறியும் கோரிக்கை ஊடாக கேட்கப்பட்ட போது தங்களுக்கு அவ்வாறான எந்தவொரு கடிதமும் அனுப்பப்படவில்லை என பதில் அனுப்பப்பட்டுள்ளதாக கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளரும், பிரதேச செயலரும் இணைந்த சங்கத்தின் செயற்பாட்டினை முடக்குவதற்க்காக செயற்பட்டு வருதுபோல் உள்ளதாகவும் சங்க பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
உண்மையில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு சங்கம் என்றும் அதற்கான அனுமதிகளை பிரதேச செயலரிடம் கோரிவது என்பது பொருத்தமானது ஒன்றல்ல, இது வேண்டுமென்று மேற்கொள்ளப்படுகின்ற ஒரு செயலாக அவதானிக்கப்படுகிறது.
கடந்த 2021 ம் ஆண்டு கடற்கரையில் பாதிக்கப்பட்ட மூன்று கரவலை தொழிலாளர்களும் தமது கரவலை தொழிலை செய்ய முடியா நிலையில் தமது தொழிலை இடை நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் கொட்டோடை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டு பாதிக்கப்பட்ட மூன்று கரவலை முதலாளிகளுக்கும், அவர்களுடன் கரவலை தொழிலில் ஈடுபட்ட முப்பது தொழிலாளர்களுக்கும் நட்ட ஈடு கோரி முறையிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.