Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின், முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் கஞ்சி விநியோகம்.

யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும்.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் இந்த கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது.இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து, முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி, அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி விநியோகிக்கப்பட்டது

அத்தோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன.  இதன்போது தமிழின படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ். நகரிலிருந்து ஆரம்பமானது. இதில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின், முன்னாள் உப தவிசாளர் விஜயன், வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி தலைவி ஜெயரஞ்சி, சமூக செயற்பாட்டாளர்  சபாஷ் அம்பிகை, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழில் பயணத்தை தொடங்கிய இந்த நினைவு ஊர்தி நாளை 13ஆம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும்.  முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.