Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் மே 19 கூடுகிறது; பொது வேட்பாளர், கட்சி வழக்கு குறித்து ஆராய்வு!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் உள்ள மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு, கட்சியின் புதிய நிருவாகத் தெரிவுக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக நிகழ்ச்சி நிரலிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ‘மக்கள் மனு’ கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை.சோ.சேனாதிராஜா, சரவணபவன் மற்றும் கிழக்கு மாகாண அங்கத்தவர்களான அரியநேத்திரன், ஸ்ரீநேசன் போன்றவர்கள் பங்கேற்றிருந்தனர். இவர்கள் கொள்கை அளவில் பொதுவேட்பாளர் விடயத்தினை ஆதரித்திருந்ததோடு கட்சி ரீதியாக தீர்மானம் எடுப்பதற்கு 14 நாட்கள் கால அவகாசம் கோரியிருந்தனர்.

இதேவேளை, தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறீதரன் தவிர ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் பொது வேட்பாளர் விடயத்திற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். கலையரசன் கட்சி எந்த முடிவினை எடுக்கின்றதோ அதற்கு கட்டுப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.