Breaking News
வல்லரசுகளே ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்கும் இன்றைய உலக ஒழுங்கை உடைத்து முப்படைகளையும் உருவாக்கியவன்.
பேரம் பேசும் வல்லமையை வளர்த்து சம தரப்பு அங்கீகாரத்துடன் உலக வல்லரசுகளையும் / அமைப்புக்களையும் தன் அலுவலக வாசல்வரை வரவழைத்தான்.
தலைவர் தமிழர் சேனைக்கு உத்தியோகப்பூர்வமாகப் பெயர் மாற்றி இன்றுடன் நாற்பத்தியெட்டு வருடங்கள்.
திரும்பிப் பார்க்கும்போது ஒரு கனவு போல் இருக்கிறது.
காற்சட்டையும் பாடசாலை சீருடையின் வெள்ளை மேற்சட்டையும் கூடவே அக்காவின் அரை மஞ்சாடி மோதிரத்துடன் மட்டும் வீட்டை விட்டு வெளியேறிய அந்தச் சிறுவன் பின்னாடி தனது சொந்த மக்களின் பலத்தில் தனது நாட்டுத் திறைசேரியை நிரப்பினான். வல்லரசுகளே ஒருத்தரில் ஒருத்தர் தங்கியிருக்கும் இன்றைய உலக ஒழுங்கை உடைத்து முப்படைகளையும் உருவாக்கி பேரம் பேசும் வல்லமையை வளர்த்து சம தரப்பு அங்கீகாரத்துடன் உலக வல்லரசுகளையும் / அமைப்புக்களையும் தன் அலுவலக வாசல்வரை வரவழைத்தான்.
இந்த மேஜிக் எப்படி நடந்தது? இது வெளியாட்களுக்கு மேஜிக் ஆகத் தெரியலாம். ஆனால் பி ர பா க ரனியத்தை உட்செரித்தவர்களுக்குத் தெரியும், அவர் சொல்லுக்கு முன் செயலுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தின் விளைச்சலே இந்த அறுவடை. அதிகம் பேசாமல் மவுனமாக இருப்பது போன்ற ஒரு வெளித் தோற்றம். ஆனால் மறுவளமாக அசுர வேகத்தில் ஒரு பாய்ச்சல். அதுதான் இந்த மேஜிக்கின் சூட்சுமம்.
கடைசிவரை செயலிலேயே இருந்ததால் நந்திக்கடலில் கூட அவர் தனது மவுனத்தை உடைக்கவில்லை. அது இந்த இனத்தின் இறுதி அறுவடைக்கான சொல்லுக்கு முன்னான 'செயல்'. அந்த விளைச்சலை எப்படி அறுவடை செய்வதென்று தெரியாமல் இந்த இனம் அதற்கு வேறு வகையான வியாக்கியானங்கள் கற்பித்துக் கொண்டு அடிபணிவு / சரணாகதி/ இணக்க அரசியலுக்குள் தம்மைப் புகுத்திக் கொண்டதுதான் பெரும் வரலாற்றுத் துயரம். ஆனால் அதையும் அவர் முன்னுணர்ந்ததால் அதற்கேற்பவே நந்திக்கடலில் தனது ஆட்டத்தை ஆடினார். அது தானாகவே எம்மை விடுதலையை நோக்கி நகர்த்தும். 'பி ர பா க ர ன் இன்று யோசிப்பதை அவரது எதிரிகள் புரிந்து கொள்ள பல பத்தாண்டுகள் காத்திருக்க வேண்டும்' அனிதா பிரதாப். இப்போது நமது முறை - நாமும் காத்திருக்க வேண்டியிருக்கிறது.
தமிழர் சேனையின் இன்றைய அகவை நாள் செய்தி இதுதான்.