Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தடை நீடிப்பு: ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு

.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் ஆறு மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) நீடித்துள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

 

பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கில் 2001/931/CFSP பொது நிலைப்பாட்டின்படி அமைக்கப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 26) புதுப்பித்தது.

 

 

இந்த பட்டியலில் விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட அமைப்பாக கருதப்படும்.தடைசெய்யப்பட்ட நபர்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் அதன் நிதி, பிற நிதி சொத்துக்கள் அல்லது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் உள்ள பொருளாதார வளங்களை முடக்குவதற்கு இந்த தடை உட்பட்டது.

 

 

அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்கள் தடைசெய்யப்பட்ட நிறுவனங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார ஆதாரங்களை வழங்குவது தடைசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.