Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நிலத்தைப் பாதுகாப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம்.

இயற்கையோடு இணைந்த வாழ்வு இனிமையானது!

உயிர் வேலிகளின் சிறப்பு.
நிலத்தைப் பாதுகாப்பதில் உயிர் வேலிகளின் பங்கு அதிகம். முன்பெல்லாம், தானாகவே வளர்ந்து உயிர் வேலிச் செடி காணப்படும். ஆனால் இப்போது கால மாற்றத்தினால் நிலத்தைச் சுற்றிச் சீமெந்துச் சுவர்களை அமைக்கின்றனர். அவற்றை விட உயிர் வேலிகள் நன்மைகள் பயப்பவை. உயிர் வேலி அமைக்கும் பகுதியில் உள்ள மரங்கள் நிலத்திற்குள் வரும் காற்றை தடுக்கும் தடுப்பானாகவும் அமையும். உயிர் வேலிகளுக்கு மண் அரிப்பு, காற்று அரிப்பைத் தடுக்கும் சக்தி உண்டு. உயிர்வேலி, உள்ளே நாம் பயிரிடும் பழ மரங்கள், தென்னை, வாழை போன்றவைகளைக் கீழே சாய விடாமல் காற்றின் வேகத்தைக் குறைத்துத் தடுக்கும் தடுப்பாகப் பயன்படுகிறது. கடற்கரை ஓரங்களிற் காற்றினால் மண் வாரி இறைப்பது தடுக்கப்படுகிறது. மண் மேடு உருவாவதும் தடுக்கப்படுகிறது. உயிர் வேலி மரங்கள் : பரம்பை முள், கிளுவை முள், கள்ளிச்செடி, நொச்சி, பனைமரம், கொடிப் பூவரசு, கொடுக்காப்புளி, இலந்தைமுள், சவுக்கு காகிதப் பூ , கலாக்காய்மரம், சீகைக்காய் மரம் இன்னும் பல. இவை பல்லுயிர்களின் வாழ்விடமாகவும் அமையும்.
(நன்றி: விவசாயத் தகவல்கள்)