Breaking News
நல்லூர் தேர்த்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாடுகளில் இடைநிறுத்தம்
.
நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளதாக நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேர்த்திருவிழா முடிவடையும் வரை தனது அரசியல் நடவடிக்கைகளிற்காக தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நல்லூர் தேர்திருவிழா முடிவடையும் வரை நான் யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்,யாழ்ப்பாணத்தினதும் நல்லூர் ஆலயத்தினதும் கலாச்சார முக்கியத்துவத்தை கருத்தில்கொண்டே நான் இவ்வாறு தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
புனிதமான தருணங்களில் பாரம்பரியங்களை பேணுவது அவசியம் என நான் கருதுகின்றேன் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.