Breaking News
இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த 2024 ஆம் ஆண்டு!
.

2024ஆம் ஆண்டு இலங்கை வரலாற்றில் அதிகளவானோர் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஆண்டாக பதிவாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தில் 312,836 பேர் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
185,162 ஆண் தொழிலாளர்களும் 127,674 பெண் தொழிலாளர்களும் இவ்வாறு தொழில் நிமித்தம் வௌிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டு அதிகளவானோர் தொழிலுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றதாகவும், கடந்த 6 வருடங்களில் 13 இலட்சம் இலங்கையர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.