ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான நேரடி விவாதம்: பின்வாங்கிய வேட்பாளர்கள்
.
எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிகின்ற ஜனாதிபதி வேட்பாளர்கள் பங்குபற்கும் நேரடி விவாதம் நேற்று நடைபெற்றிருந்த நிலையில், விவாதத்தில் ஒரு வேட்பாளர் மட்டுமே கலந்து கொண்டார்.
மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விவாதம் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர, மற்றும் நாமல் ராஜபக்ஷ, பா.அரியநேத்திரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் திலித் ஜயவீர மாத்திரமே விவாதத்தில் கலந்து கொண்டிருந்தாங்ர்.
இதேவேளை மார்ச் 12 இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நேரடி விவாதத்தில் ஜனாதிபதி வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2024ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலில் 38 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற நிலையில் நேற்றைய விவாதத்தில் 16 வேட்பாளர்கள் மாத்திரமே பங்கேற்பதாக உறுதியளித்திருந்தபோதும் நேற்று ஒருவர் மட்டுமே கலந்து கொண்டதுடன் நாளையதினமும் நிகழ்வு இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.