Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

'' டித்வா'' புயலினால் பாதிக்கப்பட்ட கால்நடை பண்ணையாளர்களுக்கு நட்ட ஈடு வழங்குவதற்கான பதிவு நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலங்களில் பதிவு செய்யப்படாத கால்நடைகள் அரசு உடமையாக்கப்படலாம்!

இலங்கையின்  1958ம் ஆண்டின் 29ம் இலக்க சட்ட ஏற்பாடுகளின்படி கால்நடைகளை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட ஏற்பாடுகளின்படி 18 மாதங்களுக்கு மேற்பட்ட சகல கால்நடைகளும் (மாடு, எருமைகள்) பதிவு செய்யப்பட்டிருப்பது கட்டாயமாகும். இதற்காக கால்நடைப்பண்ணையாளர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றி பதிவுகள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

1) கால்நடைப் பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப் படிவங்களை தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்று அவற்றினை பூரணப்படுத்தி பெப்பரவரி 15ம் திகதிக்குள் தங்களது பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
2) சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பெற்றுக்கொண்ட கால்நடை வைத்திய அலுவலகங்கள் தங்களது கால்நடைகளுக்கான பதிவுகளை மேற்கொண்டு அவற்றுக்கான பதிவு அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
3) 18 மாதங்களுக்கு மேற்பட்ட கால்நடைகளை பதிவு செய்யாது வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதை பண்ணையாளர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும்.

எதிர்காலங்களில் பதிவு செய்யப்படாத கால்நடைகள் அரசு உடமையாக்கப்படலாம் என்பதோடு கால்நடைகளுக்கான தடுப்பூசி ஏற்றுதல், கால்நடைகளை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கள், கால்நடை காப்புறுதி செய்தல், மற்றும் கால்நடைகள் திடீர் இழப்புக்கள் ஏற்படும் போது நஷ்டஈடு பெறுதல் என்பன பதிவு செய்யப்படாத கால்நடைகளுக்கு வழங்கப்படமுடியாது என்பதையும் பண்ணையாளர்கள் புரிந்து கொண்டு உரிய நடைமுறைகளை பின்பற்றுமாறு கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள வட மாகாணப்பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பண்ணைகளை ஒவ்வொரு வருடமும் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இதே போல் ஆடு,செம்மறிஆடு,பன்றி மற்றும் கோழிப் பண்ணைகளை பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை தங்களுக்குரிய பிரதேச கால்நடை வைத்திய அலுவலகங்களில் பெற்று அவற்றினை பதிவு செய்துகொள்ளுமாறு வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே போல் விலங்குணவு உற்பத்தி செய்பவர்கள் / விற்பனை செய்பவர்கள் மற்றும் விலங்குணவு பதனிடல் தொடர்பான நடவடிக்கைளில் ஈடுபடுபவர்கள் இலங்கையின் 2016 ஆம் ஆண்டிற்கான 15 ஆம் இலக்க(மாற்றியமைக்கப்பட்ட) விலங்குணவு சட்ட ஏற்பாடுகளின்படி தமது நிறுவனங்களை பெப்பரவரி 15 ம் திகதிக்கு முன்னதாக கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளுவது கட்டாயமானதாகும்.இதற்காக மாதாந்தம் 5 மெட்றிக் தொன் இற்கும் குறைவான விலங்குணவு உற்பத்தி செய்யும் / விற்பனை செய்யும் நபர்கள் தங்களை தங்களது பிரிவிலுள்ள கால்நடை வைத்திய அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளும் அதே வேளை மாதாந்தம் 5 மெற்றிக் தொன் இற்கும் அதிகமான அளவில் விலங்குணவுகளை உற்பத்தி செய்பவர்கள் / வியாபாரம் செய்பவர்கள் தங்களை மத்திய கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனவும் இலங்கை கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறியத்தந்துள்ளதாக வடமாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்கள பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.