Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

அம்பாறை – அட்டாளைச் சேனை பகுதியிலும் நேற்று தொழிற்சங்க போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை, பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் கற்றல் உபகரணங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்ற வரியை அரசாங்கம் முற்றாக நீக்க வேண்டும் என்றும், பல்கலைக்கழகத்தில் புதிய விடுதிகளை உடனடியாக அமைக்க வேண்டும் என்றும் கோரி அம்பாறை மாவட்டம் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதேவேளை அம்பாறை – அட்டாளைச் சேனை பகுதியிலும் நேற்று தொழிற்சங்க போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றது.

பொது மக்களின் வாழ்க்கைச்செலவை குறைத்து, அரச ஊழியர்களின் தேறிய சம்பளத்தை அதிகரிக்க கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் அம்பாறை மாவட்டம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தொழிற்சங்கத் தலைவர் கபீர் கலீல் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.