Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பாரிஸில் அலைபேசிக்காக 14 வயதுச் சிறுவன் கொடூரக் கொலை!

குற்றவாளி இருவரைச் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க அரசுத் தரப்பு கோரிக்கை!

பாரிஸில் கடந்த 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதம், எலியாஸ் (Elias) என்ற 14 வயதுச் சிறுவன் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் 'சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில்' (Cour d'assises des mineurs) விசாரிக்க அரசுத் தரப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பிக்கப்பட்ட இந்த வழக்கில், கொலை நடந்தபோது சிறுவர்களாக இருந்து, தற்போது 17 மற்றும் 18 வயதை எட்டியுள்ள அந்த இருவரையும் சிறார் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எலியாஸை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட்டு அவனது மரணத்திற்குக் காரணமானது மட்டுமின்றி, அவனுடன் இருந்த மற்றொரு சிறுவனை வேலியோடு சேர்த்து அழுத்தி, அவனது காலில் வீச்சரிவாளை வைத்துக் கடுமையாக மிரட்டிய குற்றத்திற்காகவும் இவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இறுதி விசாரணை முடியும் வரை, குற்றம் சாட்டப்பட்ட இருவரையும் தொடர்ந்து தடுப்புக்காவலிலேயே (Remand) வைத்திருக்கவும் அரசுத் தரப்பு வழக்குரைஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர். 

கடந்த 2025 ம் ஆண்டு   ஜனவரி 24, அன்று, பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14e arrondissement) எலியாஸும் அவனது நண்பனும் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த அந்த இருவர், எலியாஸைத் தாக்கி அவனது அலைபேசியைப் பறித்துள்ளனர். தாக்குதல் நடத்திய ஒருவரிடம் கோடாரியும், மற்றொருவரிடம் 45 சென்டிமீட்டர் நீளமுள்ள வாளும் (Machete) இருந்துள்ளன.

வாளால் கடுமையாக வெட்டப்பட்ட எலியாஸ், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, மறுநாள் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட அதீத குருதிப்போக்குக் காரணமாகப் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணைகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதியுடன் முடிவடைந்து, ஆவணங்கள் அரசுத் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த வழக்கின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இதனைச் சிறார் குற்றவியல் நீதிமன்றத்திற்கு மாற்றுவதா என்பதை இனி விசாரணை நீதிபதிகளே (Juges d'instruction) முடிவெடுப்பார்கள்.

சிறுவர்கள் மத்தியில் ஆயுதக் கலாச்சாரம் பெருகுவதையும், சிறார் குற்றவியல் சட்டங்களில் உள்ள நடைமுறைகளையும் குறித்துப் பிரான்ஸ் மக்களிடையே இந்தப் படுகொலைச் சம்பவம் மாபெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

- சிவா சின்னப்பொடி