Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆசன பங்கீட்டில் அதிருப்தி- இராதாகிருஸ்ணன்!

,

ஐக்கிய மக்கள் சக்தி போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மலையக மக்கள் முன்னணி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தும், தனித்தும் தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தும் போட்டியிட்டது. தனித்து போட்டியிட்ட இடங்களில் அதிக உறுப்பினர்களை பெற்றுக் கொண்டது.

ஏனைய இடங்களிலும் மலையக மக்கள் முன்னணி சார்பாக போட்டியிட்ட உறுப்பினர்கள் அதிக வாக்குகளை பெற்றுக் கொண்டதுடன் இதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்திக்கு போனஸ் ஆசனங்களை பெற்றுக் கொள்வதற்கு பங்களிப்பை செய்துள்ளது.

குறிப்பாக நுவரெலியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வி அடைந்த நிலையில் மலையக மக்கள் முன்னணியின் உறுப்பினர் மாத்திரமே வட்டாரத்தை வெற்றி கொண்டார்.

இவ்வாறான ஒரு நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி போன்ஸ் ஆசனங்களை பெற்றுக் கொடுக்கும் போது பங்காளி கட்சிகள் அனைத்திற்கும் பாகுபாடின்றி அதனை பெற்றுக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில் நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களின் நானும் ஒருவன். எனவே இது தொடர்பாக எமது கட்யிலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இதனை முறையாக பங்கீடு செய்ய ஐக்கிய மக்கள் சக்தி தவறும் பட்சத்தில் கட்சி பல பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.