Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சஜித், அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை?

பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ

சஜித், அநுர விவாதத்திற்காக பொது விடுமுறை?

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையிலான விவாதத்தை மக்கள் பார்க்கும் வகையில் அன்றைய தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டுமென அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஆனால் அது தொடர்பான விவாதத்தை நடத்துவதில் இரு தரப்பினரும் ஆர்வம் காட்டவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். “இன்று மற்ற இரண்டு முக்கிய வேட்பாளர்களிடம் நான் ஒரு கோரிக்கையை வைக்க விரும்புகிறேன். தயவுசெய்து அந்த விவாதத்தை நடத்துங்கள். ஏனெனில் இந்த விவாதத்தில் இருவரும் பங்கு பெறாத போக்கே காணப்படுகிறது. நான் உண்மையில் ஜனாதிபதியிடம் பொது விடுமுறையை அறிவித்து இந்த விவாதத்தைப் பார்க்குமாறு இலங்கை மக்களுக்குச் சொல்ல வேண்டும் என்று கோரினேன்.

இவர்கள் இருவரின் விவாதத்தைப் பார்த்து எப்படி நாட்டைக் கட்டியெழுப்ப போகிறார்கள் என்று பார்ப்போம். ஏனெனில் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் நாட்டை எவ்வாறு கட்டியெழுப்ப போகிறார்கள் என முதலில் பார்க்க வேண்டும். இது ஒரு வாய்ச்சவடாலே. இதை செய்ய முடியாது என்பது இரு தரப்புக்கும் தெரியும். ஒருவர் கடும் சிங்களத்தில் பேசுகிறார். மற்றையவர் கடும் ஆங்கிலத்தில் பேசுகிறார். இருவரும் பேசுவது இருவருக்குமே புரியாது. வாய்ச்சவடாலின்றி செயலில் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.