Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எரிவாயு விலை அதிகரித்துள்ள இக்கட்டான சூழலிலும் விலைகளை அதிகரிக்க மாட்டோம்! - பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்.

எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர் - அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன.

நாட்டில் எரிபொருள் , எரிவாயு விலை அதிகரித்துள்ள இக்கட்டான சூழலிலும் நாம் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க மாட்டோம் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு
நாட்டில் தற்போது டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட எரிசக்தி மூலங்களைப் பெற்றுக்கொள்வதில் பேக்கரித் தொழில்சார்ந்தோர் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசாங்கம் முறையான வேலைத்திட்டம் ஒன்றினை வகுத்துத் தர வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ள அவர், இவ்வாறான இக்கட்டான சூழலிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலைகளை அதிகரிக்கப் போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.
ரத்தொழுகமவில் புதன்கிழமை (11) காலை 10.00 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்:

இலங்கையிலுள்ள பேக்கரிகளில் 25 சதவீதமானவை எரிவாயு மூலமும், 25% முதல் 30% வரையானவை டீசல் மற்றும் மண்ணெண்ணெய் மூலமும் இயங்குகின்றன. ஏனையவை விறகு அல்லது மாற்று எரிசக்திகளைப் பயன்படுத்துகின்றன.
பேக்கரித் தேவைகளுக்காக எரிபொருளைக் கொள்கலன்களில் (Cans) கொண்டு செல்வதே வழக்கம். ஆனால், தற்போது கொள்கலன்களில் எரிபொருள் வழங்க அரசாங்கம் தடை விதித்துள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, பேக்கரிகளுக்குத் தேவையான எரிபொருளைக் கொள்கலன்களில் பெற்றுக்கொள்ள விசேட நடைமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும்.  நாட்டின் பல பகுதிகளில் நிலவும் எரிவாயு தட்டுப்பாடு, விலை உயர்வு மற்றும் மின்சாரத் தடை குறித்துப் பல பேக்கரி உரிமையாளர்கள் தமக்குத் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.