Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் அச்சம்கொள்ளப்போவது இல்லை

.

சலசலப்புக்கும் பூச்சாண்டிகளுக்கும் இந்த வியாழேந்திரன் அச்சம்கொண்டதுமில்லை அச்சம்கொள்ளப்போவதுமில்லையென இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளர்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பகுதியில் உறுதியற்ற மக்களுக்கான உறுதிகளைப்பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவையொன்று இன்று இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.

ஜனாதிபதியின் 20இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்த நிலையில் இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் கவனத்திற்கு கொண்டுசென்றதையடுத்து இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டுள்ளது.

இதில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாண பணிப்பாளர் என்.விமல்ராஜ் தலைமையில் இந்த நடமாடும் சேவை நடாத்தப்பட்டதுடன் இதில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.