Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தையிட்டி - மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் - அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!.

தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடையம் குறித்தே மக்கள் போராடுகின்றனர்.

தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர தயார் - மக்களின் காணிகளை மக்களிடம் வழங்குங்கள் - அருள் ஜெயந்திரன் வலியுறுத்து!.......
தையிட்டி விகாரையை விகாரைக்குரிய காணியில் கட்டித்தர நாம் தயார். ஆனால் சட்டமுரணாக கையகப்படுத்தியுள்ள மக்களின் பூர்வீக காணிகளை மக்களிடம் வழங்குங்கள் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் செயலாளர் நாயகம் அருள் ஜெயந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்ட அவர் மேலும் கூறுகையில் -
தையிட்டி விகாரையை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் அது அமைக்கப்பட்ட விடையம் குறித்தே மக்கள் போராடுகின்றனர். 

இதே நேரம் கடந்த அரசுகள் போன்று அனுர அரசும்  இனவாதத்தை தொடர்ந்தும் பேசாமல் அதை தடுக்க நாடாளுமன்றில் சட்டம் இயற்றி நடைமுறையாக்க வேண்டும்.
இதே நேரம்  நாட்டில் எந்தவித பயங்கரவாத அச்சுறுத்தலும் கிடையாது. அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் இனிமேலும் நாட்டுக்குத் தேவையற்ற ஒன்றாக இருக்கின்றது.

அனுர அரசு ஆட்சிகு வரும்போது கூறிய விடையங்கள் ஒன்று. இன்று செயற்படுத்துவது இன்னொன்று.
திஸ்ஸ விகாரை, செம்மணி விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தருவோம் என்றார்கள். ஆனால் அவை அனைத்து. இன்று காணாமல் போய்விட்டது
இதேவேளை வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணம் வந்து அச்சமின்றி பாதுகாப்பின்றி நடந்து செல்ல ஜனாதிபதியால் முடியுமாக இருந்தால் இன்னும் எதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் இருகின்றது. எதற்காக அதற்கு மாற்றீடான சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது