Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

70 மில்லியன் ரூபா முறைக்கேடு, நாமலுக்கு அழைப்பாணை,

,

நாட்டில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காகக் கூறி, இந்திய நிறுவனமான கிரிஷிடம் இருந்து சுமார் 70 மில்லியன் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்‌ஷவை, எதிர்வரும் 18ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து 70 மில்லியன் ரூபாய் நிதியைப் பெற்று முறைகேடு செய்ததாக நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான சட்டமா அதிபரின் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தற்போதைய அமைச்சருமான வசந்த சமரசிங்க செய்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தது.

அந்த வழக்கில் நாமல் ராஜபக்‌ஷ சந்தேகநபராக கைது செய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.