Breaking News
மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மருதானையில் ஐ.தே.கவின் மே தின விழா: ஒரு இலட்சம் பேர் பங்கேற்கும் சாத்தியம்.
ஐக்கிய தேசியக் கட்சியின் 2024 ஆம் ஆண்டு மே தின விழாவை மருதானையில் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதியில் மே தினத்தை ஏற்பாடு செய்வது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தலைமையில் லுணுகம்வெஹர பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
இந்த வருடம் மருதானையில் ஒரு இலட்சம் பேரின் பங்கேற்புடன் மே தினம் கொண்டாடப்படும் ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டம் தொடர்பாக பிரதேச மட்டத்தில் அமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் திஸ்ஸமஹாராம தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து ஐ.தே.க முக்கியஸ்தர்களும், அத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐ.தே.க செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.