Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

புலம்பெயர்தல் தொடர்பில் கனடா அரசு எடுத்துள்ள மற்றொரு முடிவு

.

கனடா அரசு தொடர்ந்து புலம்பெயர்தல் தொடர்பில் பல நடவடிக்கைகளை எடுத்தவண்ணம் உள்ளது.

அவ்வகையில், புலம்பெயர்தல் திட்டம் ஒன்றை இடைநிறுத்தியுள்ளது கனடா.

அதாவது, கனடா அரசின், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை கனடா தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக கனடாவின் புலம்பெயர்தல் துறை அமைச்சரான மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு, 20,500 பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்வதற்கான விண்ணப்பங்கள் பெறும் இலக்குடன், விண்ணப்பம் செலுத்த 35,700 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

2023ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, ஏற்கனவே 40,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்ததாக மார்க் மில்லர் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆகவே, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காகவே, தற்போது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியருக்கு நிரந்தரக் குடியிருப்பு அனுமதிக்கு ஸ்பான்சர் செய்யும் திட்டத்தை கனடா நிறுத்தியுள்ளதாக மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.பொதுவாக, இத்தகைய விண்ணப்பங்களைப் பரிசீலிக்க, சராசரியாக 24 மாதங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.