Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள்.

கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.

யாழில்.பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து பரிமாற்ற நிகழ்வு ஏற்பாடு.

பொது வேட்பாளர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் கருத்து பரிமாற்ற நிகழ்வொன்றினை நடத்தவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக மையத்தில் இன்று திங்கட்கிழமை (27) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொது வேட்பாளர் தொடர்பிலான முன்னெடுப்புக்களை முன்னெடுத்துவரும் சிவில் சமூக பிரதிநிதிகள் , பத்திரிகை எழுத்தாளர்கள் உள்ளிட்டவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் என்னை நேரில் சந்தித்து கதைத்தார்கள்.

அதன் போது போது , பொது வேட்பாளர் தொடர்பிலான எனது நிலைப்பாட்டை அவர்களுக்கு கூறினேன். அவர்களும் , பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பிலான தமது கருத்துக்களையும் கூறினார்கள்.

அப்போது நான் கூறினேன், பொது வேட்பாளர் தொடர்பில் பொது வெளியில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்வினை நடாத்தி ,அதில் ஆரோக்கியமான கலந்துரையாடலை நடாத்துவோம் என்றேன். அதற்கு அவர்களுக்கும் சம்மதித்தர்கள்.

மேலும், யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 09ஆம் திகதி பொது வேட்பாளர் தொடர்பில் கருத்துக்களை பரிமாறும் நிகழ்விற்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாது , இவர் அவரின் ஆள் இவரின் ஆள் என தாக்கி பேசாது தமது கருத்துக்களை முன் வைத்து ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் இடம்பெற்றால் மக்களுக்கும் தெளிவு கிடைக்கும். அதற்காகவே அந்நிகழ்வை ஒழுங்கமைத்துள்ளேன் என தெரிவித்துள்ளார்.