Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டம் -அரசை கண்டித்த திஸ்ஸ விதாரண

,

பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டத்தை இயற்றுதாக குறிப்பிடுவது முறையற்றது என லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில் 

மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு இந்த அரசாங்கம் முன்னேற்றகரமான எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. 

நாட்டில் புரையோடியுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தியது. மாகாண சபை முறைமைக்கு எதிராகவே மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்டது. 

பெரும்பான்மை மக்கள் மத்தியில் மாகாண சபை முறைமை குறித்து தவறான நிலைப்பாட்டை ஏற்படுத்தியது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக இரத்துச் செய்வதாக அரசாங்கம் ஆரம்பத்தில் குறிப்பிட்டது. ஆனால் தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு மாற்றீடாக பிறிதொரு சட்டம் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.

நாட்டு மக்களுக்கு சிங்கள மொழியில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு, சர்வதேசத்துக்கு ஆங்கில மொழியில் பிறிதொன்றை குறிப்பிட்டு காலத்தை கடத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. 

தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சட்டத்தின் பிரகாரம் அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்றார்.