Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வெடிக்கக் காத்திருக்கும் "உலகளாவிய நோய்": கோடிக்கணக்கான மக்களை முடக்கும் அந்த ஆபத்து என்ன?

"இது அன்றாட வாழ்க்கையின் மிகச் சாதாரணமான செயல்களைக் கூடச் செய்ய முடியாமல் முடக்கிப் போடும் ஒரு தீவிரமான நோய்"

உலகம் ஒரு அமைதியான, ஆனால் தீவிரமான சுகாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இது ஒரு புதிய வைரஸ் அல்ல, மாறாக "ஆர்த்ரோசிஸ்" (Osteoarthritis) எனப்படும் மூட்டு தேய்மான நோய். பிரான்சில் மட்டும் சுமார் 1 கோடி மக்களும், உலகளவில் 60 முதல் 70 கோடி மக்களும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கடந்த 30 ஆண்டுகளில் மட்டும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 132% அதிகரித்துள்ளது.
இந்த அபாயகரமான உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுவது, உலகம் முழுவதும் அதிகரித்து வரும் உடல் பருமன் (Obesity). முடக்கு வாத நிபுணர் மருத்துவர் எம்மானுவேல் மஹேயுவின் கூற்றுப்படி, உடல் பருமனின் அதிகரிப்பு நேரடியாக மூட்டு தேய்மான பிரச்னையை அதிகப்படுத்தியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் 19.5 கோடி பெரியவர்கள் மட்டுமே உடல் பருமன் உடையவர்களாக இருந்தனர்; ஆனால் 2022 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 87.9 கோடியாக (கிட்டத்தட்ட 90 கோடி) உயர்ந்துள்ளது. இதுவே இந்த நோய்க்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

மூட்டு தேய்மானம் என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது முழங்கால் அல்லது இடுப்பு வலிதான். ஆனால், இந்த ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சிகரமான உண்மை என்னவென்றால், இந்த நோய் கைகளையே (Digital Osteoarthritis) மிகவும் மோசமாகத் தாக்குகிறது.மிகவும் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், கைகளில் மூட்டு தேய்மானம் ஏற்படும் நோயாளிகளில் 80% முதல் 90% பேர் பெண்களே. இதன் தாக்கம் சாதாரணமாக இல்லை. பாரிஸ் மருத்துவமனை ஒன்றில் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 54% பேரால் சரியாகப் பேனாவைப் பிடித்து எழுத முடியவில்லை.10% நோயாளிகளால் தங்கள் மருந்து மாத்திரைகளைக் கூட கைகளால் கையாள முடியவில்லை.

"இது அன்றாட வாழ்க்கையின் மிகச் சாதாரணமான செயல்களைக் கூடச் செய்ய முடியாமல் முடக்கிப் போடும் ஒரு தீவிரமான நோய்" என்று மருத்துவர்  மஹேயு வருத்தம் தெரிவிக்கிறார்.
தற்போதைய நிலையில், இந்த நோய்க்கு முழுமையான தீர்வு இல்லை. சந்தையில் கிடைக்கும் மருந்துகள் வலியைக் குறைப்பதற்கு மட்டுமே உதவுகின்றன. பிரெஞ்சு சுகாதார ஆராய்ச்சி நிறுவனமான Inserm, நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த உடற்பயிற்சி மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்ற மருந்தில்லா சிகிச்சைகளையே பெரிதும் பரிந்துரைக்கிறது

- சிவா சின்னப்பொடி.