Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மட்டக்களப்பில் 4 பேருக்கு மரணதண்டனை

.

மட்டக்களப்பு சந்திவெளியில் 2017 ஆம் ஆண்டு ஒருவரை துப்பாக்கியால் சுட்டு மரணத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கிரான் மற்றும் சந்திவெளி பிரதேசங்களைச் சேர்ந்த 4 பேருக்கு, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன் இன்று (21) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 ஆம் திகதி, சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவரை, ரி-56 ரக துப்பாக்கியால் அப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக் குழு ஒன்றைச் சேர்ந்தவர்கள் சுட்டுக் கொன்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, சந்திவெளி மற்றும் கிரான் பிரதேசங்களைச் சேர்ந்த தி. கிருஸ்ணரூபன், வ. திருச்செல்வம், கு. பாஸ்கரன், க. மகேந்திரன் ஆகிய நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்து, அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
குறித்த வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று மேல் நீதிமன்ற நீதிபதி ஆர். ஜெ. பிரபாகரன், குறித்த நான்கு பேரும் குற்றவாளிகள் எனக் கண்டறிந்ததையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.