Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பலதும் பத்தும். 18.04 .2026 - ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!

ஹார்மூஸ் மீண்டும் மூடல்: ஈரான்

இன்டர்போலின் உதவியுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி!
சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த  ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி, இன்டர்போலின் உதவியுடன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு, குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் குழுவினரால் (17) நேற்று இரவு விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் மேலதிக விசாரணைக்காக மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மீட்டியகோடா, மஹாவத்தவைச் சேர்ந்த 43 வயதுடையவர் ஆவார்.  துப்பாக்கிச் சூட்டுக் குற்றங்கள் மற்றும் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் வைத்திருந்த குற்றங்களுக்காக, மீட்டியகொட, ஹிக்கடுவ, அஹுங்கல்ல, கரந்தெனிய, இமதுவ மற்றும் ஜா-எல பொலிஸ் பிரிவுகளிலுள்ள  நீதிமன்றங்களில் சந்தேக நபர் மீது வழக்குத் தொடரப்பட்டு தேடப்பட்டு வந்திருந்தார்.  மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஹார்மூஸ் மீண்டும் மூடல்: ஈரான்
ஹார்மூஸ் மீண்டும் மூடல்: ஈரான் துறைமுகங்கள் முற்றுகை தொடரும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்புக்கு பதிலடி. 
ஹார்மூஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக அறிவித்தது ஈரான். துறைமுகங்கள் முற்றுகையை அமெரிக்கா வாபஸ் பெறாத வரை, ஹார்மூஸ் நீரிணைக்கு கட்டுப்பாடு விதிப்பதாக ஈரான் அறிவிப்பு

ஒப்பந்தம் ஏற்படாவிடின் மீண்டும் குண்டுவீச்சு: ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
ஈரானுடன் எட்டப்பட்டுள்ள போர்நிறுத்தக் காலம் முடிவடைவதற்குள் நிரந்தர உடன்பாடு எட்டப்படாவிட்டால், அந்த நாட்டுக்கு எதிராக மீண்டும் குண்டுவீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நடைமுறையிலுள்ள போர்நிறுத்தம் அடுத்த வாரம் முடிவடைய உள்ளது.
அதனை நீடிக்காவிட்டால் மீண்டும் போர்ச் சூழல் ஏற்படக்கூடும் என எச்சரித்துள்ள ட்ரம்ப், எனினும் வெற்றிகரமான ஒப்பந்தம் ஒன்றை எட்ட முடியும் என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஹோர்முஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முயற்சிக்கு அதிபர் ட்ரம்ப் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!
யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை அளவீடு செய்யும் நடவடிக்கை இன்று (17) இரத்துச் செய்யப்பட்டது. தையிட்டி விகாரை அமைந்துள்ள மக்களின் காணிகளை மக்களிடமே வழங்குவதற்காக அமைச்சரவையால் இன்று அளவீடு செய்யப்படுவதாக காணி உரிமையாளர்கள் வரவழைக்கப்பட்டனர் ஆனால் இறுதியில் காணி அளவீடு செய்யப்படவில்லை. 
காணி அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்களம் ஊடாக நீதி அமைச்சர், புத்தசாசன அமைச்சர், மற்றும் கடல் தொழில் அமைச்சர் அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில தினங்களில் தீர்மானித்திருந்தனர். இன்றைய தினம் உரிமையாளர்களும் வரவழைக்கப்பட்டனர். ஆனால் அங்கு வந்த யாழ். மாவட்ட நில அளவைத் திணைக்களத்தினர் மற்றும் அரசாங்க அதிபர் மா.பிரதிபன் உள்ளிட்டோர் இன்னும் இரண்டு வாரங்கள் தவணை தேவைப்படும் என்றும் அதன் பின்னரே அழைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம்!
இங்கினியாகல, கலுகொல்ல பகுதியில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் விழுந்ததில் காணாமல்போன விமானப்படை சர்ஜென்ட் ஒருவரின் சடலம் நேற்று (16) கண்டெடுக்கப்பட்டதாக இங்கினியாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சடலத்தை முதலைகள் உட்கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்லமவிலிருந்து கின்னியகல நோக்கிச் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள், பல்லம பஹலந்த வீதியிலுள்ள கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். விழுந்ததில் மோட்டார் சைக்கிள் செலுத்துனரான சர்ஜென்ட் நீரில் மூழ்கி காணாமல் போன நிலையில், பொலிஸாரினால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் அம்பாறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்னால் கோர விபத்து; ஒருவர் காயம்!
மந்திகை வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு (RDA) முன்பாக சற்று நேரத்திற்கு முன்னர் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. அதிவேகமாக வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தின் போது ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்கள்.
2026 ஆம் ஆண்டு தரம் 1 இன் II மற்றும் III ஆம் தவணைகளுக்குரிய செயற்பாட்டுப் புத்தகங்களை விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2026.04.30 ஆம் திகதியளவில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் அவற்றை விநியோகித்து முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
தரம் 1 பாடத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆசிரியர் பயிற்சிகள், மாகாண ஆரம்பக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன.

மேலதிகமாகத் தேவைப்படும் பயிற்சிகளை 2026.05.16 ஆம் திகதிக்குள் நிறைவு செய்யுமாறு மாகாணப் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தரம் 1 இன் முதலாம் தவணைக்குரிய பாடப்பரப்புகளைப் பூர்த்தி செய்ய முடியாத பாடசாலைகள் காணப்படின், எதிர்வரும் இரண்டாம் தவணையில் அந்தப் பாடப்பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்கு அதிபர்கள் நடவடிக்கை எடுப்பார்கள்.

பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த கார் 300அடி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
பலாங்கொட பகுதியில் இருந்து கண்டி நோக்கி பயணித்த காரொன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியினை விட்டு விலகி சுமார் 300அடி பள்ளத்தில் பாய்ந்து கெசல்கமுவ ஒயாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.