பலதும் பத்தும். 14.04 .2026 - கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
யாழ். இணுவிலில் அதிகாலையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அறுப்பு!
பலதும் பத்தும்.
'நீளிரா'
'நீளிரா' படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் நல்லூர் ஆலயம் சென்று பார்வையிட்டனர்.
யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த 'நீளிரா' படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர்.
நல்லூர் ஆலயம், யாழ் . பொது நூலகம், வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை, ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன், திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தைகள் தோல்வி
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக முற்றுகையிட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
ஈரானுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை தடுத்து நிறுத்தும் என அவர் அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கடற்படை போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகை
பாகிஸ்தான் கடற்படையின் ‘PNS TAIMUR’ மற்றும் ‘PNS ASLAT’ ஆகிய போர்க்கப்பல்கள் நல்லெண்ண வருகைக்காக 2026 ஏப்ரல் 12 ஆம் திகதி காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்ததையடுத்து, இலங்கை கடற்படை தனது கடற்படை மரபுகளின்படி கப்பல்களை வரவேற்றது.கொழும்புத் துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள ' ‘PNS TAIMUR’ கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NIAMAT SAEED KHAN உம் ‘PNS ASLAT' கப்பலின் கட்டளை அதிகாரியாக கெப்டன் NADIR MATEEN AFRIDI உம் உள்ளனர். மேலும், இந்தக் கப்பல்கள் இலங்கை கடற்படையுடன் இருதரப்பு கடற்படைப் பயிற்சியில் (Bilateral Naval Exercise LION STAR V) ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளன.
கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.
கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடுகளில் ஒன்றான ஹைதியின் மிலாட் நகரில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மிலாட் நகரில் காணப்படும் ஹென்றி எனும் லபெரியர் கோட்டையில் வார இறுதியை முன்னிட்டு நேற்று திருவிழா நடைபெற்றுள்ளது.
இதில் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். அப்போது அங்கு திடீரென கனமழை பெய்ததினால் அங்கிருந்தவர்கள் பாதுகாப்பான இடங்களை தேடி ஓடியுள்ளனர். அப்போது மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 30 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் 70இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
யாழ். இணுவிலில் அதிகாலையில் பெண் ஒருவரின் தங்கச் சங்கிலி அறுப்பு!
யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் அதிகாலை வேளையில் வீட்டில் இருந்த 69 வயதுடைய பெண் ஒருவரின் தங்கச் சங்கிலியை மர்ம நபர் அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இன்று காலை 5.15 மணியளவில், இணுவில் தெற்கு தருமலிங்கம் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலேயே இந்தத் சம்பவம் அரங்கேறியுள்ளது.சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த சுமார் 3 பவுண் தங்கச் சங்கிலியை இனந்தெரியாத நபர் வலுக்கட்டாயமாக அறுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகைதந்த சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


