Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமெரிக்கா போர்க்கப்பல்களை ஈரான் கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது ஏன் என அரசாங்கத்துக்கு தெரியாதா? - சம்பிக!

வீதியில் மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் எரிபொருளுக்காகக் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு இருக்கும் அறிவு கூட அரசாங்கத் தலைவர்களுக்கு இல்லை!

அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன? அமெரிக்காவின் இந்த முன்னெடுப்புக்கள் குறித்து அரசாங்கத்துக்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையா என முன்னாள் அமைச்சர் சம்பிக ரணவக்க கேள்வியெழுப்பினார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் பல பகுதிகளில் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்திலேயே மக்கள் இவ்வாறு வரிசைகளில் காத்திருக்கின்றனர். சாதாரண பொதுமக்களுக்கு இருக்கும் இந்த விழிப்புணர்வும் அச்சமும் அரசாங்கத்திடம் ஏன் இல்லை?

அமெரிக்கா கடந்த ஜனவரி மாதத்திலேயே தனது பாரிய போர்க்கப்பல்களை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள கடற்பரப்பிற்கு கொண்டு சென்றது. கோடிக்கணக்கான டொலர்களை செலவிட்டு அமைதியாக இருப்பதற்காகவா அந்தப் போர்க்கப்பல்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டன என்பது எவருக்கும் புரியும் விடயமாகும். கடந்த காலங்களில் வெனிசுவேலா போன்ற நாடுகளிலும் இவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டதை நினைவுபடுத்த விரும்புகின்றேன். உலகளாவிய ரீதியில் இவ்வாறான போர் அபாயங்கள் தெரிந்திருந்தும், அதற்கு முகங்கொடுக்க அரசாங்கம் போதிய எரிபொருள் இருப்புகளை சேமித்து வைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 10 இலட்சம் இலங்கையர்கள் பணிபுரிகின்றனர். நாட்டின் அந்நியச் செலாவணி வருவாய்க்கு இதுவே பிரதான வழியாகும். கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3 இலட்சம் இளைஞர், யுவதிகள் தொழில் தேடி வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். போர் வெடித்தால் அங்குள்ள எமது மக்களின் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுகிறது. ஈராக் - குவைத் போரின் போது இலட்சக்கணக்கான இலங்கையர்கள் அகதிகளாக மாறியதையும், இந்தியா போன்ற நாடுகள் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பித் தமது மக்களை மீட்டெடுத்த போது, இலங்கை அரசாங்கம் முறையான திட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இம்முறையும் அத்தகையதொரு இக்கட்டான நிலை ஏற்பட்டால் அரசாங்கத்திடம் என்ன திட்டம் இருக்கிறது?

அரசாங்கம் இயற்கை அனர்த்தங்களை கையாண்ட விதம் அதிருப்திக்குரியது. கடந்த காலங்களில் ஏற்பட்ட சூறாவளி மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் கூட முறையான தங்குமிடங்கள் இன்றி கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அரசாங்கம் சமூக ஊடகங்களில் வீடுகள் கட்டுவது போலவும், பாதைகளை அமைப்பது போலவும் விளம்பரம் செய்தாலும், கள நிலைவரம் முற்றிலும் வேறாக உள்ளது. சுனாமி அனர்த்தத்தின் போது தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் மத நிறுவனங்கள் ஒன்றிணைந்து மிக விரைவாக வீடுகளைக் கட்டி முடித்தமை அனைவருக்கும் நினைவில் இருக்கும். தற்போது அரசாங்கம் அத்தகைய உதவி வழங்கும் நிறுவனங்களை ஊக்குவிப்பதில்லை. தாமே அனைத்தையும் செய்வதாகக் கூறி எதையும் செய்யாமல் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக, வீதியில் மோட்டார் சைக்கிள்களிலும் முச்சக்கர வண்டிகளிலும் எரிபொருளுக்காகக் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு இருக்கும் அறிவு கூட அரசாங்கத் தலைவர்களுக்கு இல்லை. ஜனவரி மாதத்திலிருந்தே அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததன் விளைவாகவே இன்று மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர். வரும் நாட்களில் நாடு ஒரு பாரிய நெருக்கடியை எதிர்நோக்கும் என எச்சரிக்கின்றோம் என்றார்.

எம்.மனோசித்ரா