Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

மடப்புரம் அஜித்குமார் பிரேத பரிசோதனை அறிக்கை: 50 காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு, சிகரெட் சூடு!

இந்தச் சித்ரவதை பல மணி நேரம், பலர் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்

திருபுவனம் அருகே மடப்புரத்தில் காவலாளி அஜித் குமார் மரணம்தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கையில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட அஜித் குமாரை, போலீசார் சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவரது உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்ததாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஜித்தின் உடலில் 12 சிராய்ப்பு காயங்கள் இருந்ததுடன், மீதமுள்ளவை ரத்தக்கட்டு காயங்கள் ஆகும். குறிப்பாக, ஒரே இடத்தில் பல முறை தாக்கப்பட்டதைக் காட்டும் வகையில், ஒரு காயத்துக்குள்ளேயே பல்வேறு வகை ரத்தக்கட்டு அடையாளங்கள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலையில் ரத்தகசிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கை 

அதிலும் மிகச் முக்கியமாக, வயிற்றில் கம்பி குத்திய காயம், மண்டையோட்டில் அடிக்கபட்டதால் ஏற்பட்ட காயம் மற்றும் மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு ஆகியவை மரணம் கொடூரமாக நிகழ்ந்ததைக் காட்டுகிறது. மேலும், சிகரெட் கொண்டு சூடு வைக்கப்பட்ட புண் இருப்பதாகவும் என்பதும் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தரையில் இழுத்துச் செல்லப்பட்டதையோ அல்லது தற்காப்புக்காக போராடியபோது ஏற்பட்டதையோ போன்ற சிராய்ப்புகள் கூட உடலில் இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மேலும், இந்தச் சித்ரவதை பல மணி நேரம், பலர் சேர்ந்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த அதிர்ச்சி தகவல்கள், காவல்துறையினரால் நேரிடையான அதிகாரம் மீறிய விசாரணை, மனித உரிமை மீறல் உள்ளிட்ட கேள்விகளை எழுப்பும் வகையில் உள்ளன.