ஈழத்து வரலாறும் தொல்லியலும்
மண்ணுக்குள் புதையுண்ட தமிழர் நாகரிகத்தை புதைபொருள் ஆய்வு, வரலாற்று ஆவணம் மூலமும் வெளிப்படுத்துதல்
கடலோடிகள் வாழும் சில பகுதிகள் ஏன் குப்பம் என அழைக்கப்படுகிறது. பாக்கம், பட்டினம், பதி, நகர், சும்மை, பூக்கம், சேரி, புரம், முட்டம், பூண்டி,அகரம், குடியே, குறிச்சி, கோசரம், அகலுள், நொச்சி, இருக்கை, வேலி, குப்பம், பாடி, குறும்பு, பாழி, சிறுகுடி, தண்ணடை, உறையுள், எயிலொடு, வாழ்க்கை, உட்படுத்து இருபத் தேழும் நாடில் ‘ஊர்’ என நவின்றிசி னோரே"“பட்டும், நொச்சியும், பள்ளியும் சிற்றூர்” திவாகர நூற்பாக்களாலில் பாடப்பட்டு இவை எல்லாம் ஊரின் பெயர்கள் என கூறுகிறது. இதன் பெயர்க்காரணம் என்ன என சரியான விளக்கத்தை இதுவரையில் எந்த தமிழ் அகராதியும் கொடுக்க வில்லை
சில அகராதிகள் குப்பம் என்றால் செம்படவர் வாழும் சிற்றூர் என விளக்கம் கொடுக்கும். ஆனால் குப்பம் என்றால் சரியான வரலாறு தெரிந்து கொள்ள படியுங்கள். நான் வரலாறு எழுதும் போது மீனவர் என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் கடலோடி என்ற பதத்தைத்தான் பயன்படுத்துவேன் . காரணம் நெய்தல் நிலத்தில் வாழ்பவன் கடல் சார்ந்து பல தொழில் செய்யக்கூடியவன்.
1)வணிக கப்பல் கடலோடி
2)கப்பல் கட்டுவோர்
3)ஏற்றுமதிக்கான சேமிப்பு கிடங்கு வைத்து இருப்போர்
4) பவளம் எடுப்போர்,
5)முத்துக்குளிப்போர்
6) முத்து பவளம் வணிகர்
7)சங்கு குழிப்போர்
8)சங்கு பொருட்கள் செய்வோர்
9)உப்பு எடுப்போர், வணிகம் செய்வோர்
10) ஆமை பிடிப்போர்
11) ஓங்கி பிடிப்போர்
12) சுறா மற்றும் மீன் பிடிப்போர்
13) நண்டு பிடிப்போர்
14) கலங்கரை விளக்கம் வைத்து இருப்போர் ( கோரி வைத்து இருப்போர் )
கடலோடி வணிகர்களில், துணி வணிகர், உப்பு வணிகர்,கூல வணிகர், பணித (அழகுப்பொருள்) வணிகர் இருந்தனர். இப்படி கடல் சார்ந்து பல விதமான தொழில் செய்த மக்களை கடலோடிகள் என்று கூறுவதுதான் சரியான பதமாக இருக்க முடியம். இப்படி கடல் சார்ந்த இந்த வரலாறுதான் தமிழரின் பூர்வீக வரலாறு.
இந்த கடலோடிகளிடம் இருந்து கப்பல் கட்டுவது கப்பல் ஓட்டுவது கடல் கடந்து வணிகம் செய்வது முத்து எடுப்பது பவளம் எடுப்பது போன்றவை இன்று நம்மிடம் இல்லாமல் போய், நாம் நாட்டுபடகு மீனவராகவும் விசைப்படகு மீனவராகவும் ஒருசிலர் அடுத்தவன் கப்பலில் மாலுமிகளாகவும் மட்டுமே நாம் இருக்கிறோம்.
நாம் நமது வரலாற்றை சரியாக அறிந்து அடுத்தவருக்கும் புரிய வைப்பது நமது கடமையாகும். கடலோடிகள் நாம் உருவாக்கி வாழ்ந்த பகுதிகளுக்கு நாம் வைத்த பெயர் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். பட்டினம், பட்டணம், துறை = வணிக துறைமுகம்
பாக்கம் = கடல் வணிகர்கள் வாழும் குடியிருப்பு பகுதி
குப்பம் - பண்டகசாலை அல்லது கொட்ககாரம்
பேட்டை = கடலோடிகள் முத்து விற்பனை செய்யும் சந்தை பகுதி பேட்டை, உதாரணமாக தஞ்சாவூர் முத்துப்பேட்டை, இராமநாதபுரம் முத்துப்பேட்டை, திருநெல்வேலி பேட்டை
சாவடி = கடலோடி முத்து வணிகர்கள் வணிகத்திற்கு செல்லும் போது தங்கி செல்லும் பகுதி. உதராணமாக மதுரை சவேரியார் சாவடி.
கோவளம் = கடற்குள் நீண்ட தரை முனை கொண்ட பகுதி, அதாவது கடலுக்குள் நிலப்பரப்பு ஓர் கூர்முனை போல் நீண்டு இருந்தால் கோவளம் என அழைத்தனர் கடலோடிகள். உதாரணமாக மாதரசன் பட்டினம் அருகே கோவளம். கன்னியாக்குமரி, கோவளம், விழிஞ்சம் அருகே கோவளம் கேரளா
கடலூர் - என்றால் கடல் நீர் உருக்குள் ஓடைபோல் நீண்டு இருந்தால் கடலூர் - கடலை ஒட்டிய பகுதி எல்லாம் கடலூர் அல்ல, கடலுக்கு உள்ளே ஊர் இருந்தால் கோவளம், ஊருக்குள் கடல் நீர் இருந்தால் கடலூர். உதாரணமாக தமிழ்நாடு கடலூர் ஆந்திரா கடலூரு
காயல்- காயல் என்றால் கடற்காயலின் வேறு பொயர்கள் வாவி, களப்பு, ஆத்துவாய், உப்பங்கழி இந்த காயல் கடல்நீர், ஆற்றுநீர்,மலைநீரால் உருவாக்கப்படும் உப்பு ஏரி. இவை சில இடங்களில் கடலில் இருந்து தொடர்பு இல்லாமலும் பல இடங்களில் தொடர்போடும் இருக்கும் இவை ஆற்றின் முகத்துவாரப்பகுதில் தான் அதிகம் உருவாகி இருக்கும்
உதாரணமாக , புன்னைக்காயல், காயல் பட்டணம், காயல் பட்டு, ஆலப்புழா காயல்
கரை- கரை என்று முடியும் பெயர்களுடைய ஊர்களும் கடலோடிகள் வாழும் ஊர்களே
உதாரணமாக
கீழக்கரை, கோடியக்கரை,
இடிந்தகரை,இலங்கை முன்னக்கரை, போன்றவை கரை என்றால் கடற்கரையை குறிக்கும்
நொச்சி- நொச்சி என்றால் வணிக துறைமுகத்திற்கு வெளியே உள்ள துறைமுகம் சார்ந்த பகுதி அதாவது புறத்துறை வெளி துறை என்பது பொருள் ஆகும்.
இப்படி கடலோடிகள் பல இடங்களுக்கு பெயர் வைத்தார்கள் என்பதை நீங்கள் புரிந்து இருப்பீர்கள். இன்றய சென்னை என்பது பழமையான நான்கு பட்டினங்களை உள்ளடக்கிய பகுதியாகும்.
அவை
மாதரசன் பட்டினம், சதிரானபட்டினம் , புதுப்பட்டினம், நீலகங்கரையன் பட்டினம்,
அப்படி என்றால் ஒவ்வொரு பட்டினத்திற்கும் வணிக பொருட்கள் சேமித்து வைக்க சேமிப்பு மையங்கள் சில இருந்து இருக்கும் அல்லவா அதாவது புறத்துறை அந்த புறத்துறையில் தான் வணிக பொருட்கள் குவித்து வைக்கப்படும். ஏன் வணிக பொருட்களை சேமித்து வைக்க வேண்டும் என்றால் வணிகத்திற்கு ஏற்ற காற்று அடிக்கும் வரையில் கப்பல்கள் காத்து இருக்க வேண்டும். உதாரணமாக
சோழகாற்று இலங்கையில் இருந்து மலேசியா செல்வதற்கு ஏற்ற காற்று , வாடைகாற்றில் அங்கிருந்து வல்வெட்டித்துறையை அடைவார்கள் கடலோடிகள். தமிழ் நாட்டில் தை பிறந்தாள் வளி பிறக்கும். தையில் வணிகத்திற்கு கிளம்பி பங்குனி முடிவதற்குள் வணிகத்தை முடித்து திரும்ப வேண்டும் காரணம் இந்த நாட்கள் கடல் பயணத்திற்கு ஏற்ற காற்றடிக்கும் காலம் மற்றும் பாதுகாப்பான காலநிலை ஆகும்.
சேரநாட்டிற்கு ஐப்பசி தொடங்கி வைகாசி வரையில் வணிகத்திற்கு ஏற்ற காலம் ஆகும்.வணிக பொருட்களை சேமித்து வைக்கும் புறத்துறை பல இருந்தன அங்கே பொருட்கள் மூட்டை மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டு மலைபோல் குவிக்கப்பட்டு இருக்கும். அந்த குவியல் தான் குப்பம் என அழைக்கப்பட்டது. ஆக கடலோடிகள் வணிகத்திற்கு வணிக பொருட்களை பாதுகாக்கும் பகுதிதான் குப்பம் ஆகும்
இன்று நம்மிடம் வணிகமும் இல்லை கப்பலும் இல்லை நாம் அனைவரும் மீன் மட்டும் பிடித்து வாழ்வதால் குப்பங்கள் மீனவர் குடியிருப்பாக உள்ளது. இதற்கு மேலும் ஓர் குறிப்பை தருகிறேன் போர்சுகீசியன், டச்சுக்காரன், ஆங்கிலேயன் அனைவரும் உருவாக்கிய கடற்கரையோர கோட்டைகள் அனைத்திலும் கொட்டகாரம் இருப்பதை ஆய்வு செய்து பாருங்கள் நான் கூறும் உண்மைக்கு வலுசேர்க்கும்
கொட்டகாரம் என்றால் பொருட்களை சேமித்து வைக்கும் பகுதி. ஐரோப்பியர்களும் தமிழ் கடலோடிகளை போன்றே இங்கிருந்து பொருட்களை சேர்த்து வைத்து இருந்து எடுத்துச்சென்றனர். இப்போது இருக்கும் அனைத்து குப்பங்களும் புறத்துறை அல்ல ஊர் என்று முடியும் ஊர்களுக்கு கூட மீனவர்கள் வாழ்வதால் குப்பம் என வரலாறு தெரியாமல் பெயர் சூட்டி உள்ளனர் பிற்காலத்தில் நொச்சிக்குப்பம் என்ற ஓர் பெயர் போதும் பல ஆயிரக்கணக்கான ஆண்டு கடலோடியின் வரலாற்றை உலகிற்கு கூற.நொச்சிக்குப்பம் என்பதற்கு புறத்துறை கொட்டகாரம் அல்லது புறத்துறை பண்டகசாலை என்பது பொருள் ஆங்கிலத்தில் External seaport warehouse என மொழி பெயர்க வேண்டும்.
சங்க இலக்கியத்தில் கடல் வணிகம்
புறநானூறு - 30:10-14
அகநானூறு — 130:9-11
அகநானூறு 149: 9,10
நற்றிணை - 295: 5, 6
மதுரை காஞ்சி 81 83
மதுரை காஞ்சி 321 323
பட்டினப்பாலை: 125-141
பட்டினப்பாலை: 185-193
பெரும்பாணாற்றுப்படை: 319–321
சங்க இலக்கிய பாடல்களை படித்து கடலோடிகளின் கடல் வணிகம் பற்றி மேலும் அறிந்து கொள்ளுங்கள். பட்டினம்,பட்டணம், துறை என்றால் என்ன ?
தமிழ்நாட்டில் வாழும் கடலோடிகளை மூன்று பிரிவாக பிரிக்கலாம். அவை சோழ பரதவர், பாண்டிய பரதவர் சேர பரதவர் என்பன ஆகும்.
கலிங்கபட்டினத்தில் தொடங்கி விசாகபட்டினம் வழியாக பலவேற்காடு கடற்கரை முதல் அதிராம பட்டினம் கடற்கரை வரையில்,சோழ பரதவர் பகுதியாகும் . இன்றய காலகட்டத்தில் பலவேற்காட்டில் இருந்து என எடுத்துக்கொள்ளலாம்.
பாண்டிய பட்டணங்கள் தொண்டி தொடங்கி இராமேஸ்வரம் பாம்பன் வழியாக கன்னியிக்குமரி வரை,சேர பரதவர் பகுதி கோவளம் தொடங்கி கோடிமுனைவழியாக கேரள கடற்கரை பகுதி
பட்டினம், பட்டணம்,துறை மூன்றும் ஒரே பொருள் கொண்டது. அதாவது கடற்துறைமுகங்களை மூன்றாக பிரிக்கலாம், அவை கடல் வணிக துறைமுகம், முத்துச்சலாப துறைமுகம், மீன்பிடி துறைமுகம். இவற்றில் கடல் வணிகம் நடைபெரும் இடங்கள் பட்டினம், பட்டணம், துறை என அழைக்கப்பட்டன.
சோழ பரதவர் உருவாக்கிய வணிகதுறைமுகங்கள் பட்டினம் என்றும், பாண்டிய பரதவர்கள் உருவாக்கிய வணிகதுறைமுகங்கள். பட்டணம் என்றும் சேர பரதவர் உருவாக்கியவை துறை என்றும் அழைக்கப்பட்டன.
பாக்கம் என்றால் என்ன ? கடல் வணிகம் செய்யும் கடலோடி வணிகர்கள் வாழும் குடியிருப்பு பகுதி பாக்கம் என அழைக்கப்பட்டது என்று சங்க இலக்கியம் சான்று பகர்கிறது. சிலப்பதிகாரம் (5:56-58) இருந்துபுறம் சுற்றிய பெரும்பாய் இருக்கையும்,
பீடுகெழு சிறப்பின் பெரியோர் மல்கிய பாடல்சால் சிறப்பின் பட்டினப் பாக்கமும்,
உரை - ஜான் மில்டன் பர்னாந்து அரண்மனைக் கோட்டையைச் சுற்றி அமைந்த பெரிய குடி இருப்புகளும் பெரும் புகழுடைய செல்வந்தர்கள் நிறைந்த பெருமை உடையது பட்டினமும் பாக்கமும். பாக்கம் என்றால் நெய்தல் நிலத்தூர் மற்றும் அரசன் இருப்பிடம் என்றும் பொருள்.
பாக்கத்தில் வாழும் பரதவர் நற்றினை 111 நற்றாய் கூற்று.
அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த் தலை இறவொடு
தொகை மீன் பெறீஇயர் வரி வலைப் #பரதவர்
கரு வினைச் #சிறாஅர் மரல் மேற்கொண்டு
மான் கணம் தகைமார் வெந் திறல் இளையவர்
வேட்டு எழுந்தாங்கு #திமில் #மேற்கொண்டு #திரைச் #சுரம் #நீந்தி
#வாள் #வாய்ச் #சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும்
பெருங் கழிப் பாக்கம் கல்லென
வருமே தோழி கொண்கன் தேரே
விரிச்சி பெற்றுப்புகன்ற தோழி தலைவிக்கு உரைத்தது
உரை - ஜான் மில்டன் பர்னாந்து
பரதவ சிறுவர்கள் மரத்தை எடுத்து கொண்டு ஆழியை கடந்து சென்று வாள் வாய் சுறாவை அதாவது வேளாவை கொண்டு வந்து மணற்மேட்டில் போடக்கூடிய தகுதிபடைத்தவர்கள் என கட்டியம் கூறுகிறது இந்த பாடல். அதேபோல் இந்த பாடல் பெருங்கழிப்பாக்கம் வாழ்ந்த பரதவர் சதுப்பு நிலத்தில் கிடைக்கும் இறால் மீனை பிடிக்க வரிவலை என்ற வலையை பயன் படுத்தியதையும் கூறுகிறது ஆக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரதவர்களிடம் வெவ்வேறு மீனுக்கு வேறு வேறு வலை உபயோகிக்கும் முறை இருந்தது என்பதை நிறுபிக்கிறது. நெய்தனிலத்தூர். கொழும்பல்குடிச் செழும்பாக்கத்து (பட்டினப். 27)
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் தெய்வம் உணாவே (தொல்.நூ.18, நச்.உரை பவானந்தம் பதிப்பு ப.54) என்னும் நூற்பா உரைவிளக்கத்தில் நெற்தற்கு ஊர் பட்டினமும் பாக்கமும் என்று கூறியுள்ளார்.இன்றைய சென்னை என அழைக்கப்படும் மாதரசன் பட்டினத்தை சுற்றி உள்ள பாக்கங்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு கொடுக்கிறேன்.
1)பட்டினம்பாக்கம்
2)நெசப்பாக்கம்
3)நுங்கம்பாக்கம்
4)ஆதம்பாக்கம்
5)கோடம்பாக்கம்
6)சேப்பாக்கம்
7)அயப்பாக்கம்
8)அரும்பாக்கம்
9)சிட்லபாக்கம்
10)கிருகம்பாக்கம்
11)ஈஞ்சம்பாக்கம்
12)காரப்பாக்கம்
13)கோவிலம்பாக்கம்
14)மடிப்பாக்கம்
15)மணப்பாக்கம்
16)மீனம்பாக்கம்
17)பெரும்பாக்கம்
18)செம்பாக்கம்
19)விருகம்பாக்கம்
20)துரைப்பாக்கம்
21)கடப்பாக்கம்
22)கீழ்ப்பாக்கம்
23)சித்தாலப்பாக்கம்
24)சென்றம்பாக்கம்
25)மஞ்சம்பாக்கம்
26)மாம்பாக்கம்
27)கேளம்பாக்கம்
28) கிளாம்பாக்கம்
கல்வெட்டில் மாதரசன் பட்டினம், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகே, பெண்ணையாற்று மடம் என்ற ஊர் உள்ளது. இங்கே பெண்ணேஸ்வரர் ஆலயம் ஒன்றும் இருக்கிறது. ஆற்றுக்கும், ஆலயத்துக்கும் நடுப்பகுதியில் இருக்கும் குன்றின் அடிவாரத்தில் உள்ள கல்வெட்டு 1367 ஜூலை 21 - ம் தேதி விஜயநகர மன்னன் கம்பண்ண உடையாரால் உருவாக்கப்பட்டவை. அதில் மாதரசன் பட்டினத்தைப் பற்றி தகவல் உள்ளது. பல பட்டினங்கள் கல்வெட்டில் இடம் பெற்று உள்ளன மாதரசன் பட்டினம், சதிரானபட்டினம் , புதுப்பட்டினம், நீலகங்கரையன் பட்டினம், கோவளம் போன்றவை இடம் பெற்று உள்ளது.
இப்போது சொல்லுங்கள் நாங்கள் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடல் வணிகராக கடலோடியாக நாங்கள் வாழ உருவாக்கிய பட்டினத்தில் நாங்கள் எங்கள் கடல் வணிகம் அழிந்த பின் , மீன் மட்டும் பிடிப்பவனாக எங்களை நீங்கள் பார்ப்பதால் நாங்கள் பிடித்துவரும் மீன் உங்களுக்கு நாற்றம் அடிக்கிறது என்றால் இதைவிட கொடுமை உலகில் இருக்க முடியுமா ? புலவுநாறு சிறுகுடி’ (நற்.338:8)
அடேய் பல ஆயிரக்கணக்கான ஆண்டாக மீன் புலால் வாசம் தான்டா எங்கள் சுவாச காற்று.
இப்படிக்கு
கடலோடி
அன்புடன் சிவ பாரதர் என்ற கடலோடி
( ஜான்மில்டன் பர்னாந்து ) John Milton Fernando