ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் விரிவான கலந்துரையாடல்; ஆயர் பேரவையின் தலைவர் மற்றும் அருட்தந்தையருடன் ஜனாதிபதி சந்திப்பு
.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர், குருநாகல் ஆயர் ஹெரோல்ட் அந்தோனி பெரேரா உள்ளிட்ட கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில், கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் செயலாளர் நாயகம் அருட்தந்தை டொன் அன்டன் ஜயக்கொடி, கொழும்பு உதவி ஆயர் உள்ளிட்ட அருட்தந்தையர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டில் கல்விச் சீர்திருத்தங்கள், ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணையின் முன்னேற்றம், சுற்றுச்சூழல் மற்றும் கத்தோலிக்க திருச்சபை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் குறித்தும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் அருட்தந்தையர்களுக்கு ஜனாதிபதி இதன்போது தெரியப்படுத்தினார்.