Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பத்ம பூஷன் விருது பெறும் அஜித்குமாருக்கு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

.

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘வேட்டையன்’ படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். சௌபின் சாஹிர், நாகர்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜனவரி 7ஆம் தேதியன்று அதிகாலை தாய்லாந்திற்கு கிளம்பிச் சென்று, அங்கு ’கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் 20 நாட்கள் பங்கேற்று முடித்துவிட்டு விமான மூலம் நேற்று நள்ளிரவு சென்னை திரும்பினார்.  

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது ரசிகர் ஒருவர் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். அப்போது அவரிடம், நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் கேட்டபோது, வாழ்த்துகள் என தெரிவித்து விட்டு தனது காரில் ஏறி புறப்பட்டு சென்றார். முன்னதாக ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்த் உடன் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  

ஒவ்வொரு ஆண்டும் நமது நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டு அதன்பின் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்தாண்டு பத்ம விபூஷன் விருது 7 பேருக்கும், பத்ம பூஷன் விருது 19 பேருக்கும், பத்ம ஸ்ரீ விருது 113 பேருக்கும் என பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 139 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பத்ம பூஷன் விருது அறிவிக்கப்பட்ட 19 பேரில் தொழிலதிபர் நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா சந்திரசேகர் ஆகிய 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்ட 113 பேரில் குருவாயூர் துரை, புரிசை கண்ணப்பா சம்பந்தன், ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி, வேலு ஆசான் என ஆகியோர் உள்ளனர்.

‘கூலி’ திரைப்படத்திற்கு பிறகு நெல்சன் இயக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இதன் அறிவிப்பு பொங்கலையொட்டி வெளியானது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.