Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரிட்டனில் அகதிகளுக்கு 'செக்'! - சொந்த நாட்டுக்கே திரும்ப அனுப்ப முடிவு!

பிரித்தனியா அரசு, நாட்டிற்கு வரும் அகதிகள் தொடர்பான தனது கொள்கைகளை அதிரடியாகக் கடுமையாக்குகிறது. குடும்பங்களை வரவழைக்கத் தடை!

பிரித்தனியா அரசு, நாட்டிற்கு வரும் அகதிகள் தொடர்பான தனது கொள்கைகளை அதிரடியாகக் கடுமையாக்குகிறது. இனி அகதிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறைக்கப்படும் என்றும், அவர்கள் சொந்த நாட்டிற்குத் திரும்பும் சூழல் "பாதுகாப்பானது" என்று கருதப்பட்டவுடன், அவர்கள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் பிரித்தனியா அரசு அறிவித்துள்ளது.
இந்த புதிய சீர்திருத்தங்கள் அடுத்த வாரம் முழுமையாக வெளியிடப்பட உள்ளன. இதன் முக்கிய அம்சங்கள்:
அகதி அந்தஸ்து என்பது இனி பிரிட்டனில் நிரந்தரமாகத் தங்குவதற்கான அனுமதி அல்ல. அவர்களின் சொந்த நாட்டில் நிலைமை சீரடைந்தால், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.
 அகதிகள் பிரிட்டனுக்கு வந்தபின், தங்கள் குடும்ப உறுப்பினர்களை (மனைவி, குழந்தைகள்) நாட்டிற்கு வரவழைக்கும் "குடும்ப இணைப்பு" (Regroupement familial) திட்டமும் நிறுத்தப்படுகிறது. இனி அகதி அந்தஸ்து கிடைத்தவுடன், தானாகவே குடும்பத்தை அழைத்து வர முடியாது.
கடந்த ஜூன் 2025-க்கு முந்தைய ஓராண்டில் மட்டும், சுமார் 21,000 அகதிகள் இந்தக் குடும்ப இணைப்புத் திட்டத்தின் கீழ் விசா பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளும் ஆவர்.
பிரிட்டனில் சட்டப்பூர்வமான மற்றும் சட்டவிரோதமான குடியேற்றத்தின் எண்ணிக்கை அதன் உச்ச கட்ட   அளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக, குடியேற்றத்திற்கு எதிரான 'Reform UK' போன்ற தீவிர வலது சாரி கட்சிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இந்த அரசியல் அழுத்தத்தைச் சமாளிக்கவும், உள்நாட்டில் நடக்கும் காரசாரமான விவாதங்களைத் தணிக்கவும் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சி அரசு இந்தக் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது.