விடுதலைப் புலிகளுக்கான தடை ,தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் ; நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கை!
சிறிலங்கா செய்திகள் சிறிலங்கா நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான ஐக்கிய இராச்சியத்தின் தடை-தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோருவோம்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட சட்ட ரீதியிலான நடவடிக்கையை அடுத்து தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பொன்றாக தடை செய்தமை ஏற்றுக் கொள்ளத்தக்கது என தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேன்முறையீட்டு ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஆணையகத்தின் தீர்ப்புதொடர்பாக தமது அடுத்த நகர்வை எதிர்வரும் நாட்களில் தீர்மானிக்கும்.தமிழீழ விடுதலைப் புலிகளை ஐக்கிய இராச்சியம் தடைசெய்தமைக்கெதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கொண்டு வரப்பட்ட இரண்டாவது சட்ட ரீதியிலானநடவடிக்கை இந்த வழக்காகும்.
நாடுகடந்த தமிழிழீழ அரசாங்கத்தால் முதலாவதாக கொண்டு வரப்ட்ட சட்ட நடவடிக்கையின் தீர்ப்பில், தமிழீழவிடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக எடுக்கப்பட்ட முறைமையில் தவறு இருந்ததாக கூறிய மேன்முறையீட்டுஆணையகம், தடையை ஐக்கிய இராச்சிய உள்துறைஅமைச்சு மீள் பரிசீலனை செய்யுமாறு தீர்ப்பளித்திருந்தது. உள்துறை அமைச்சு தடையை மீளவும் தொடர்ந்தது. இவ்வழக்கானது அம்முடிவிற்கு எதிராக மேற்கொண்ட சட்டநடவடிக்கை ஆகும்.
ஆணைக் குழுவின் தலைவர் இவ் வழக்கானது நெருங்கியதொன்றும் சமநிலையாக இருந்ததென்றும் எனத் தெரிவித்த போதும் உள்துறை அமைச்சின் முடிவை ஏற்றுக் கொள்வதாக ஆணையகம் தீர்ப்பளித்துள்ளது.
உள்துறை அமைச்சின் தீர்மானத்துக்கெதிரான சட்டரீதியிலான நடவடிக்கையானது தகுதிஅடிப்படையானதொன்றல்ல என ஆணைக்குழு மீண்டும் குறிப்பிட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளை தொடர்ந்து தடை செய்வது சரியானதா என ஆணைக்குவால் கூற முடியாது. ஆயினும் அம் முடிவு தொடர்பாக உள்துறை அமைச்சால் எடுக்கப்பட்ட முறைமையில் எந்தத் தவறும் இல்லை என உறுதிப்படுத்த முடியும் என தீர்ப்பளித்துள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் புலனாய்வு உறுப்பினர்,ஒருவரால் கிளிநொச்சியில் 2020ஆம் ஆண்டு ஜூலை நான்காம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டு வெடிப்பு 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2 ஆம் திகதி பஸ் ஒன்றில் கிளைமோர் கண்ணிவெடியை பொதியில் வைத்து கடத்தியது தொடர்பாக கைது செய்யப்பட்ட செய்தி சிறிலங்கா அரசாங்க இணையத்தளங்களின் மீது தமிழீழ இணையப் படையால் மே 18ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகள்பயங்கரவாதத்திற்கு தயாராகின்றார்கள் என்ற நிலைப்பட்டைஐக்கிய இராச்சியத்தின் உள்துறை அமைச்சு எடுத்திருந்தது.
சிறிலங்கா செய்திகள் சிறிலங்கா நீதிமன்றங்களின் முடிவுகள் நம்பத் தகுந்தது அல்ல என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது. எனினும் அந்த ஆவணங்களை விலக்குவதற்கு தேவையான போதுமான சட்டரீதியிலான குறைபாட்டை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கவில்லை என ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது.
ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சிற்கு வழங்கப்பட்ட தகவல் தவறானது எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் அவற்றில் ஆறு நாடுகளில் (சிறீலங்கா இந்தியாமலேஷியா ஐக்கிய இராச்சியம் ஐக்கியஅமெரிக்கா கனடா) மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளனர் என்பதை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோடிட்டுக்காட்டியிருந்தது.
மேலும் 27 நாடுகள் (ஐரோப்பிய ஒன்றியத்தின் 26 நாடுகள்) தங்களது பொருளாதாரத் தடைப் பட்டியலில் மட்டுமே தமிழீழவிடுதலைப் புலிகளை உள்ளடக்கியுள்ளன என்றும் நாடு கடந்ததமிழீழ அரசாங்கம் சுட்டிக் காட்டி இருந்தது.
உள்துறை அமைச்சால் அத் தவறுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள தென்பதை ஏற்றுக் கொண்ட ஆணையகம்இ அந்தத் தவறுகள் உள்துறைஅமைச்சின் தீர்மானத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை அல்ல எனக் குறிப்பிட்டிருந்தது.
இந்தோ-பசுபிக்கை நோக்கி நகரும் ஐக்கிய இராச்சியத்தின் வெளிவிவகாரக் கொள்கைஇ தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது இந்தியா இலங்கையுடனானஇ ஐக்கிய இராச்சியத்தின் உறவுகளை பாதிக்கும் என்ற வெளிநாட்டு பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகத்தின் ஆலோசனையை உலகளாவியரீதியில் பயங்கரவாதக் குழுக்களிற்கெதிரான ஒத்துழைப்புக்களை பலப்படுத்தும் பின்னணியில் பார்க்கவேண்டும் என ஆணையகம் தன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
சிறீலங்காவில் தனித் தமிழ் நாடொன்றைக் கோருபவர்கள் ஐக்கிய இராச்சியத்தில் தமது அரசியலை முன்னெடுத்தலிலும் தமிழீழ இலச்சினையை வெளிப்படுத்துவதிலும் தமிழீழவிடுதலைப் புலிகளுக்கு எதிரான தடை தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்வாதிட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடிக்கும் தமிழீழ தேசியக்கொடிக்கு மிடையேயுள்ள வேறு பாட்டை அங்கீகரித்த ஆணையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளும் நுட்பமான வேறு பாடுகளை புரிந்து கொள்ள மாட்டார்களெனவும் ஏற்றுக்கொண்டுள்ளது. பொலிஸாருக்கும். சமூகங்களுக்கும் இடயேயான உரையாடல்கள் எதிர்காலத்தில் பொலிஸாரின் தவறான புரிதல்களைக் குறைப்பதற்கு வழிவகுக்கும் என ஆணையகம் குறிப்பிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழஅரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளைப் போல் வடகிழக்கு சிறீலங்காவில் தமிழ் நாடொன்றை அமைக்கும்சிந்தனையைக் கொண்டிருக்கின்ற போதும் நாடுகடந்த தமிழீழஅரசாங்கத்துக் கெதிராக உள்துறை அமைச்சு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆணையகம் மேலும்குறிப்பிட்டுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது அதன் சட்டத்தரணி பீற்றர் ஹெய்ன்ஸ் ராஜ சட்டத்தரணி திருமதி சாந்தி சிவகுமரன் சொலிசிட்டர் போல் ஹெரொன் (பொதுநல சட்ட நிறுவகம்) ஆகியோருக்கு அவர்களது மிகச் சிறப்பான சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு கடமைப்பட்டுள்ளது.
சர்வதேச ஒழுங்கு மற்றும் பொறுப்புக் கூறலில் சட்டத்தின் முக்கியத்துவம் கருதி நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது ஈழத் தமிழர்களின் சார்பில் தொடர்ந்தும் சட்டப்போராட்டங்கள் மூலமும் நீதியைக் கோரி நிற்கும்.