Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இளம் கைதிகள் சீர்த்திருந்த நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த நபர் பதுளை வைத்தியசாலையில்!

சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

தல்தென்ன  இளம் கைதிகள்  சீர்த்திருந்த நிலையத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்த 30 வயதுடைய நபர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிக்சை பலனின்றி நேற்றைய தினம் (14/06) உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் இலக்கம் P 09, வெனிவெல்கடுவ, அலவ்வ பகுதியைச்ச சேர்ந்த நபர் ஆவார்.

குறித்த நபர்  490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் தன்கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கடந்த 6 ம் திகதி மாளிகாத்தன்னை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதன் பின்னர் 5000 ரூபாய் தண்டப்பணம் செலுத்துவதற்கு நீதிவான் உத்தரவிட்டதன் பின்னர் தண்டப்ணத்தை செலுத்தாதமையின் காரணத்தினால் , மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தல்தென்னை  இளம் கைதிகளின் சிறையில் வைக்குமாறு நீதிவான்  உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 16 ம் திகதி குறித்த நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த வேளையில், சிறை அதிகாரிகளால் குறித்த நபர் பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டதன்  பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் பதுளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்படுள்ளதாகவும் , மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.