Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

கனேடிய சிறையில் காச நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நேர்ந்த அவலம் ; கொண்டுவரப்பட்ட சட்டம்!

.

கனேடிய மாகாணம் ஒன்றில், காசநோயால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவரை அதிகாரிகள் சிறையில் அடைத்த விடயம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அவர் குற்றம் எதுவும் செய்யவில்லை எனினும் அவருக்கு காசநோய் தாக்கியிருந்தது. அவர் சரியான முறையில் மருந்து எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறி, அவரை சிறையில் அடைத்துள்ளார்கள்.

மேலும் சிறையில், பலமுறை உடை களையப்பட்டு சோதிக்கப்பட்டு, பயங்கர குற்றவாளிகளுக்கிடையே, என்ன செய்வது, யாரிடம் உதவி கேட்பது என தெரியாது, பயத்துடன் நாட்களை செலவிட்டுவந்துள்ளார் மேசன்.

கனடாவின் மனித்தோபா மாகாணத்தில் வாழும் ஜெரால்டைன் மேசன் (Geraldine Mason, 36), அக்டோபர் மாதம் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேசன் குறித்து கேள்விப்பட்ட மனித்தோபா பிரீமியரான Wab Kinew, உடனடியாக அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.காசநோய் பாதித்த எவரையும் இனிமேல் சிறையில் அடைக்கக்கூடாது என்று அவர் பிறப்பித்த ஆணை நேற்றே கையெழுத்தும் ஆகிவிட்டது.

அவர் ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து நேற்றையதினம் மேசன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

தான் சிறையில் அவதியுற்ற நிலையில், இனி காசநோய் பாதிக்கப்பட்ட யாரும் சிறையில் அடைக்கப்படமாட்டார்கள் என்பது தெரியவந்துள்ளதால் தான் மகிழ்ச்சியடைவதாக மேசன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மேசன் தினமும் ஒழுங்காக மருந்து எடுத்துக்கொள்வதை உறுதி செய்வதற்காக, மருத்துவ ஊழியர் ஒருவர் அவரை ஃபேஸ்டைமில் சந்திக்கவேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.