20 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பிரசாரத்தில் பராக் ஒபாமா உரை
.
அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் பிரசாரத்தில் பராக் ஒபாமா இன்று உரையாற்றுகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல், வருகிற நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சியின் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப்பும் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், அமெரிக்காவின் சிகாகோ நகரில், ஆக. 19, திங்கள்கிழமை, நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் பேசிய அதிபர் ஜோ பைடன், பிரியாவிடை அளித்ததுடன், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துகளை விமர்சித்தும் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று நடைபெறவுள்ள மாநாட்டில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவு தெரிவித்து, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உரையாற்றவுள்ளார்.
ஹாரிஸின் தைரியமான நம்பிக்கை என்ற தலைப்பில், ஒபாமா உரையாற்றவுள்ளார். இந்த மாநாட்டில், 50 மாநிலங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 5,000 பிரதிநிதிகள் கூடுகின்றனர். மேலும், இந்த மாநாட்டில் பராக் ஒபாமாவின் மனைவி மிஷெல் ஒபாமாவும் உரையாற்றுகிறார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு, ஒபாமா உரையாற்ற உள்ளதால், மக்களிடையே ஆவல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.