Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜெர்மனி அதிபர் திறமையற்ற முட்டாள்; எலான் மாஸ்க் விமர்சனம்

,

ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் உலகின் முன்னணி தொழில் அதிபரான எலான் மஸ்க் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனி அதிபராக இருக்கும் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் என்பவர் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி செய்து வருகிறார். அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு பெரும் எதிர்ப்பு ஏற்பட்டது.

ஜெர்மனி அதிபர்  பதிலடி: இதையடுத்து அவர் முன்கூட்டியே தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், வரும் பிப்ரவரி மாதம் ஜெர்மனியில் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் திறமையற்ற முட்டாள் என்றும், ஜனநாயகத்துக்கு எதிரான கொடுங்கோலன் என்றும் தெரிவித்துள்ளார்மேலும் அவர் ஜெர்மனியின் வலதுசாரி கட்சிக்கு அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளார்

இதுகுறித்து ஜெர்மனி அதிபர் அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் கூறிய போது, ஜெர்மனியில் பேச்சு சுதந்திரம் இருப்பதால் தான் கோடீஸ்வரர் முதல் சாதாரண ஆட்கள் வரை விமர்சனம் செய்ய முடிகிறது என பதிலடி கொடுத்துள்ளார். 

யாரும் விரும்பியதை பேசலாம், ஆனால் வலதுசாரிகளை ஆதரித்தால் பேச்சு சுதந்திரம் பறிபோகும், எனவே அதை ஏற்க முடியாது என எலான் மஸ்க் கருத்துக்கு ஜெர்மனி அதிபர் கண்டனம் தெரிவித்தார்.