"சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்தாரோ அதைப்போல் சிங்கப்பூர் உருமாறியுள்ளது" - லீ குவான் யூ மறைவை நினைவுகூர்ந்த தலைவர்கள்
திரு லீ இறக்கும்போது அவருக்கு வயது 91

சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ மறைந்து இன்றோடு 10 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன.
அதைப் பற்றி பிரதமர் லாரன்ஸ் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் தங்களுடைய Facebook பக்கத்தில் பதிவிட்டனர்.
திரு லீ சவால்களைத் தகர்த்து நாட்டை உருவாக்கியதாகப் பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
பொருளாதார மீள்திறன், திறமைக்கு முக்கியத்துவம், நல்லிணக்கம் ஆகியவற்றைக்கொண்டு திரு லீ சிங்கப்பூரை உருவாக்கியதாக அவர் சொன்னார்.
சிங்கப்பூர் எப்படி இருக்கவேண்டும் என்று திரு லீ எண்ணினாரோ அதைப்போல் தூய்மையான, பசுமையான, துடிப்புமிக்க நகரமாகச் சிங்கப்பூர் உருமாறியிருப்பதாகப் பிரதமர் வோங் கூறினார்.
"அவர் தேசத்திற்கு என்ன செய்தாரோ அதை வைத்து சிங்கப்பூரர்கள் அவரை நினைவில் வைத்திருக்கின்றனர். எனக்கும் என்னுடைய குடும்பத்திற்கும் அவர் அப்பா, தாத்தா.. அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் நடந்துகொள்வோம்" என்று திரு லீ சியன் லூங் Facebook-இல் பதிவிட்டார்.