"நாடற்ற தமிழன்" - இதை விடக் கொடிய வதை மரணம் கூட இல்லை! - "பர்மிஸ்மயம்"
பர்மா தற்போது மியான்மர் "அங்கே தமிழர்களின் நிலைமை!
மருத்துவமனை மறுக்கும் சிகிச்சை!, பள்ளிக்கூடம் மறுக்கும் கல்வி!!, வங்கி மறுக்கும் பணம்!!!, கடைசியில் சுடுகாடு மறுக்கும் நிலம்.
1962-ல் நே வின் (Ne Win) ராணுவ ஆட்சி அமைந்தபோதே தமிழர்களின் வீழ்ச்சி தொடங்கியது. "பர்மிஸ்மயம்" -கொள்கையின்படி, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் பர்மிய மொழி மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்., தமிழ் மொழியில் கல்வி கற்க உரிமை இல்லை..
பர்மிஸ்மயம்"பௌத்த மதத்தை ஒரு தேசிய அடையாளமாக முன்னிறுத்துகிறது.இதனால் அங்கே வாழும் இந்துத் தமிழர்களும், இஸ்லாமியர்களும் இரண்டாம் தர குடிமக்கள்..
நீ பர்மிய வம்சாவளி இல்லையா? அப்படியானால் உனக்கு இங்கே குடியுரிமை கிடையாது" என்று கூறி, 150 ஆண்டுகாலம் உழைத்த தமிழர்களை 'நாடற்றவர்கள்' ஆக்கியது இந்த 'பர்மிஸ்மயம்' தான். 1823-க்கு முன்னால் அந்த நாட்டில் இருந்தவர்களுக்கு மட்டுமே குடியுரிமை... 'நாடற்றவர்' (Stateless) என்ற முத்திரையோடு வாழ்வது... ஒவ்வொரு நொடியும் செத்து மடிவதற்குச் சமம்.
ஒரு குழந்தை பிறந்தவுடன் 'பிறப்புச் சான்றிதழ்'வழங்கப்படாததால்...சட்டப்படி அந்த நாட்டில் "இல்லாத குழந்தை"..இப்படி ஒரு உயிர் என் மண்ணில் பிறக்கவே இல்லை."என்கிறது மியான்மர்.. பிறப்புச் சான்றிதழ் இல்லை - அடையாள அட்டை கிடையாது...அவன் அந்த நாட்டின் குடிமகன் கிடையாது..அந்த மண்ணில் வாழ்வான், சுவாசிப்பான், நடப்பான்... ஆனால் அவன் நிழல் மனிதன்.. எவ்வளவு பெரிய அநியாயம்.
சட்டப்படி ஒரு குழந்தை 'இல்லை' என்று ஆகும்போது, அந்தக் குழந்தை கடத்தப்பட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ எந்தக் காவல் நிலையத்திலும் புகார் அளிக்க முடியாது. "இல்லாத ஒரு உயிருக்கு எப்படிப் புகார் அளிக்க முடியும்?" வளர்ந்த பிறகு, இந்தக் குழந்தைகள் எங்கும் வேலைக்குச் செல்ல முடியாது. இதனால் ராணுவமோ அல்லது தனியார் நிறுவனங்களோ இவர்களை மிகக்குறைந்த கூலிக்கு 'கட்டாய உழைப்பில்' ஈடுபடுத்தும். நவீன கொத்தடிமைகள். இவர்களால் எங்கும் நீதியும் கேட்க முடியாது.
ஒரு குழந்தை பிறக்கும்போது அது ஒரு தேசத்தின் குடிமகனாகப் பிறக்க வேண்டும். ஆனால் நம் இனக் குழந்தை தொட்டிலில் படுக்கும்போதே 'நாடற்றவன்' என்ற சிலுவையைச் சுமக்கத் தொடங்குகிறது. இதில் இன்னும் கொடுமை தமிழ்க் குழந்தைகளின் பள்ளிப் பருவம்... அது போர்க்களத்தை விடக் கொடியது.
பள்ளியில் ஆசிரியர் முதல் சக மாணவர்கள் வரை அனைவருமே இவர்களை 'கலா' (Kala) என்ற இழிபெயரிட்டே அழைக்கிறார்கள். (பர்மா மொழியில் 'கலா' என்பது அந்நியர்களையும், வெளிநாட்டிலிருந்து வந்தவர்களையும் குறிக்கும் ஒரு அவச்சொல்).
வகுப்பறையில் மற்ற மாணவர்களோடு இவர்கள் சமமாக உட்கார முடியாது. கடைசி வரிசையிலோ., தரையிலோ தான் அமர வேண்டும. தமிழில் பேசினால் கடுமையான தண்டனை.
மியான்மர் அரசு பர்மிய மாணவர்களுக்கு வழங்கும் சீருடைகள், புத்தகங்கள், மதிய உணவு போன்ற எந்தச் சலுகைகளும் 'நாடற்ற' தமிழ்க் குழந்தைகளுக்குக் கிடையாது..தமிழ்க் குழந்தை நன்றாகப் படித்தாலும், அவர்களுக்கு உரிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படுவதில் சிக்கல்... மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளில் சேர 'தேசிய அடையாள அட்டை' (NRC) கட்டாயம்.
எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அந்த ஒரு காகிதம் இல்லாத காரணத்தால் அவன் மீண்டும் கூலித் தொழிலாளியாகவே மாற்றப்படுகிறான்..??. ஒரு மருத்துவர் ஆக வேண்டியவன், செங்கல் சூளையில் கல் சுமக்கிறான்.....??பேனாவைப் பிடிக்க வேண்டிய கையில், அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் மண்வெட்டியைக் கொடுப்பது எவ்வளவு பெரிய சமூக அநீதி?
தமிழர்கள் வங்கி கணக்கு தொடங்கவோ, உரிமம் (License) பெறவோ முடியாது. இதனால் சிறு வியாபாரம் கூடப் பிறர் பெயரில் செய்ய வேண்டிய அவலம். பூர்வீகமாக வாழ்ந்த நிலத்திற்குப் பட்டா கிடைக்காது. சீனா போன்ற நாடுகள் திட்டங்கள் கொண்டு வரும்போது, எந்த இழப்பீடும் இன்றி இவர்களின் வீடுகள் இடிக்கப்படும்.
ஊர் விட்டு ஊர் செல்ல முடியாது.
ஒரு கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்குச் செல்லக் கூட உள்ளூர் அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். இவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. அதனால் வெளிநாடுகளுக்குப் பிழைக்கச் செல்ல முடியாது. இந்தியா போன்ற நாடுகளுக்குத் தப்பி வர நினைத்தாலும் அது 'சட்டவிரோத ஊடுருவல்' என்றே பார்க்கப்படும்..
மியான்மரில் நடக்கும் உள்நாட்டுப் போரில், குடியுரிமை இல்லாத தமிழர்களை ராணுவம் வலுக்கட்டாயமாகப் பிடித்துச் செல்கிறது. போர்க்களத்தில் இவர்களைத் தான் முன்னால் (Human Shields) நிறுத்துகிறார்கள். எதிர்த்தால் சுட்டுக்கொல்லப்படுவார்கள்.
'இரத்தம் கொதிக்கும் Human Shields' - 'மனிதக் கேடயங்கள்' பற்றிக் கேட்டால். ராணுவம் அல்லது ஆயுதமேந்திய குழுக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள, ஆயுதமற்ற சாதாரண மக்களைத் தங்களுக்கு முன்னால் ஒரு சுவராகப் பயன்படுத்துவார்கள்.
எதிரிப் படைகள் துப்பாக்கியால் சுடும்போது, ராணுவ வீரர்கள் அந்தத் தோட்டாக்களில் இருந்து தப்பிக்க, சாதாரண தமிழ் மக்களைத் தங்களுக்கு முன்னால் நடக்க வைப்பார்கள்.சுட்டால், முதலில் சாவது நம் அப்பாவித் தமிழர்களாகத்தான் இருக்கும்.
மியான்மர் காடுகளில் கிளர்ச்சியாளர்கள் நிலத்திற்கு அடியில் 'கண்ணிவெடிகளை' புதைத்து வைத்திருப்பார்கள். ராணுவ வீரர்கள் அந்தப் பாதையில் செல்ல பயந்து, அங்கிருக்கும் தமிழர்களைப் பிடித்து அந்தப் பாதையில் நடக்கச் சொல்வார்கள். கால் வைத்த இடத்தில் குண்டு வெடித்தால் அந்தத் தமிழன் உடல் சிதறிப்போவான், ராணுவம் தப்பித்துக் கொள்ளும்.
ராணுவ வீரர்களின் கனமான துப்பாக்கிகள், உணவுகள் மற்றும் தளவாடங்களைச் சுமக்கத் தமிழர்களைப் பிடித்துச் செல்வார்கள். அடர்ந்த காடுகளில் உணவோ, நீரோ இன்றி இவர்களை நடக்க வைப்பார்கள். களைப்பால் யாராவது கீழே விழுந்தால், அவர்களை அங்கேயே சுட்டுக்கொன்றுவிட்டு அடுத்தவனைப் பிடிப்பார்கள்.
குடியுரிமை இல்லாததால், மியான்மர் ராணுவத்திற்கு நம் தமிழர்கள் வெறும் 'சதைக் கோளங்களே' துப்பாக்கிக் குண்டுக்கு முன் நம் பிள்ளைகளை நிறுத்துவதை விடக் கொடிய அநீதி உலகில் வேறு ஏதுமில்லை.
தமிழர்களுக்குப் கேட்க ஆள் இல்லை; இவர்கள் செத்தாலும் எந்தச் சர்வதேச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர இவர்களுக்கு 'தான் ஆவணங்கள்' இல்லையே..இந்தத் தைரியத்தில்தான் மியான்மர் ராணுவம் நம் மக்களை 'மனிதக் கேடயங்களாக' மாற்றுகிறது.
"ரோஹிங்கியா "மியான்மரில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் இஸ்லாமியர்கள் வங்கதேசத்திலிருந்து வந்தவர்கள்..ஐக்கிய நாடுகள் சபை (UN), ரோஹிங்கியாக்களை "உலகிலேயே மிக அதிகமாகத் துன்புறுத்தப்படும் சிறுபான்மையினர்" என்று அழைக்கிறது.
மியான்மர் ராணுவம் தமிழர்களுக்கு என்ன செய்கிறதோ, அதையேதான் இவர்களுக்கும்செய்கிறது. "ரோஹிங்கியாக்கள் பற்றி உலகம் பேசுகிறது... ஐநா சபை பேசுகிறது... , பக்கத்து நாடான வங்கதேசம் கூடப் பேசுகிறது! ஆனால், அதே மியான்மரில் அதே அநீதியை அனுபவிக்கும் நம் பல லட்சம் தமிழர்களைப் பற்றிப் பேச ஒரு நாதி இல்லையே, அதுதான் என் வேதனை!
மதம் வேறாக இருக்கலாம், ஆனால் மியான்மர் ராணுவம் நடத்தும் வேட்டை ஒன்றுதான். ரோஹிங்கியாக்களுக்கு ஒரு வங்கதேசம் இருக்கிறது. ஆனால், நம் தமிழர்களுக்குத் தமிழ்நாடு இருந்தும் நாம் இன்னும் மௌனமாக இருக்கிறோம்?" அவர்கள் அந்நியர்கள் அல்ல; நம் பாட்டன் பூட்டன் ரத்தம். இன்று அவர்களுக்கு ஒரு நாடில்லை, ஒரு முகவரி இல்லை, ஏன்... உயிர் வாழ உரிமையே இல்லை!
நம் இனத்தின் வாழ்வுரிமைக்காக ஒன்றுபடுவோம்.. பகிருவோம்..ஒரு 'ஷேர்' என்பது வெறும் பதிவு அல்ல; அது மியான்மர் காடுகளில் முகவரியற்றுத் தவிக்கும் ஒரு தமிழனின் கையைப் பிடித்து 'நான் இருக்கிறேன்' என்று சொல்வதற்குச் சமம்!" ஒரு தமிழன் அடிபடும்போது இன்னொரு தமிழன் துடிக்கவில்லை என்றால், 'தமிழன்' என்ற பெயருக்கு நாம் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவோம்.
தன் நாட்டு மண்ணைத் திருத்திய தமிழனுக்கு ஒரு அடையாள அட்டை கொடுக்க மறுப்பதுதான் உலகின் ஆகப்பெரிய அயோக்கியத்தனம்!" உலகுக்கு உரைத்து சொல்வோம். ஒரு நாட்டின் பன்முகத்தன்மையை அழித்து, 'ஒரே மொழி, ஒரே இனம்' என்று பேசுவது அந்த நாட்டின் அழிவுக்கான ஆரம்பம்! 'பர்மிஸ்மயம்'- மெதுவான இனப்படுகொலை. இவர்களின் மௌன வலி அதிகாரத் திமிரைச் சுட்டெரிக்கப் போகும் எரிமலை!.
- முகநூல் பதிவு


