Breaking News
கிழக்கு, ஊவா மாகாணங்களில் மின்னல் தாக்கம் - வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் பதிவாகும் சாத்தியமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களின் போது ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.