ரஷ்யாவின் அணுசக்தி பாதுகாப்பு படைகளின் தலைவர் வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார்!
.
அணுசக்தி பாதுகாப்புப் படைகளுக்குப் பொறுப்பான ரஷ்ய உயர்மட்ட ஜெனரல், செவ்வாயன்று மாஸ்கோவில் நடந்த வெடி விபத்தில் கொல்லப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் அணு, உயிரியல் மற்றும் இரசாயனப் பாதுகாப்புப் படைகளின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், கிரெம்ளினுக்கு அருகிலுள்ள ரியாசான்ஸ்கி ப்ரோஸ்பெக்டில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு வெளியே கொல்லப்பட்டார்.உக்ரைனில் தடைசெய்யப்பட்ட இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட கிரில்லோவ் மீது குற்றம் சுமத்திய ஒரு நாளுக்குப் பிறகு இந்த கொலைத்தாக்குதல் நடந்துள்ளது.இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், ஜெனரல் இகோர் கிரில்லோவ் கொல்லப்பட்டதற்கு உக்ரேனிய பாதுகாப்பு சேவை பொறுப்பேற்றது. ஒரு அறிக்கையில்,"உக்ரைனின் பாதுகாப்பு சேவை மாஸ்கோவில் ஒரு சிறப்பு நடவடிக்கையில் ரஷ்ய ஜெனரல் கிரில்லோவைக் கொன்றது" என்று கூறியுள்ளது.
ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து இறந்த ஜெனரல்
ரஷ்ய புலனாய்வு அமைப்புகளின்படி, மின்சார ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து தான் ஜெனரல் கிரிலோவ் கொல்லப்பட்டுள்ளார்.இந்த சம்பவத்தில் மற்றொரு நபரும் இறந்ததாக செய்திகள் கூறுகின்றன."ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளின் கதிர்வீச்சு, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்புப் படைகளின் தலைவர் இகோர் கிரில்லோவ் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டனர்" என்று ஒரு விசாரணைக் குழு மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸால் கூறப்பட்டது.RKhBZ எனப்படும் ரஷ்யாவின் கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் பாதுகாப்பு துருப்புக்கள், கதிரியக்க, இரசாயன மற்றும் உயிரியல் மாசுபாட்டின் நிலைமைகளின் கீழ் செயல்படும் சிறப்புப் படைகள் ஆகும். அதன் தலைவராக இருந்தவர் தான் ஜெனரல் கிரிலோவ்.