Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் 11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சம்!

ஈரான் தாக்குதல் எதிரொலியால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும்  11 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், லெபனான், ஈராக், கட்டார், குவைத், சவுதி அரேபியா, ஜோர்தான், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் பாதுகாப்பு காரணங்களுக்காக தங்களது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.
இதனால், தோஹா, அபுதாபி, குவைத், டுபாய் நாடுகளுக்கு செல்லும் 6 விமானங்களும், அங்கிருந்து சென்னைக்குச் செல்லும்   5 விமானங்களும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
தாய்லாந்திலிருந்து கட்டார் தலைநகர் தோஹா சென்ற 3 கட்டார் எயார்லைன்ஸ் விமானங்கள் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டன.
இதேவேளை இந்தியாவில் இன்று லண்டன், பஹ்ரைன், அபுதாபி செல்லும் விமானங்கள் அனைத்தும் தாமதமாக இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முழுமையான போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, எரிபொருள் விலைகள் கணிசமாக குறைந்துள்ளதென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 2.69 அமெரிக்க டொலர்கள் (3.76%) குறைந்து 68.79 டொலர்களாக பதிவாகியுள்ளது. இது ஜூன் 11, 2025க்குப் பின்னர் பதிவான மிகக் குறைந்த விலையாகும்.
இதற்கு முன்னதாக, ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு முயற்சிப்பதாக எழுந்த அச்சத்தால் ஏற்பட்ட பதற்றத்தின் காரணமாக, நேற்று (23) உலகளாவிய எரிபொருள் விலைகள் 3% உயர்ந்து, ப்ரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 79 டொலர்களாக காணப்பட்டது.
எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக்கூடிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

எதிர்காலத்தில் எரிபொருள் தொடர்பான நெருக்கடி ஏற்படும் பட்சத்தில், அதனை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், நைஜீரியா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து எண்ணெய் மாதிரிகளை பரிசோதிக்கவும் CPC திட்டமிட்டுள்ளது.
இந்த உலகளாவிய எண்ணெய் நெருக்கடியின் தாக்கம் வரவிருக்கும் ஓகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் உணரப்படலாம் என்று CPC தெரிவித்துள்ளது.