முக்கிய உலக மற்றும் பிரான்ஸ் நாட்டுச் செய்திகளின் தொகுப்பு!
உக்ரைன் - ரஷ்யா: விண்ணில் பறந்த 300 ட்ரோன்கள்!
???? உலகம் & சூழலியல்: வெனிஸில் 'பச்சை'ப் புரட்சி!
சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பெர்க் (Greta Thunberg) மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். இத்தாலியின் வெனிஸ் நகரில் நடைபெற்ற COP30 மாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், புகழ்பெற்ற 'கிராண்ட் கெனால்' (Grand Canal) கால்வாயில் பச்சை நிறச் சாயத்தை ஊற்றிப் போராட்டம் நடத்தினர். இது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத சாயம் என்று அவர்கள் கூறினாலும், வெனிஸ் நகர நிர்வாகம் கடுங்கோபமடைந்தது. இதன் விளைவாக, கிரெட்டாவிற்கு 48 மணி நேரம் வெனிஸ் நகருக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாகக் காசா விவகாரத்திற்காக இஸ்ரேலிலும் இவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
???? உக்ரைன் - ரஷ்யா: விண்ணில் பறந்த 300 ட்ரோன்கள்!
போர் மேகங்கள் இன்னும் கலையவில்லை. நேற்றைய இரவுப் பொழுதில் உக்ரைனும் ரஷ்யாவும் மாறி மாறித் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தின.
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழப்பு.
உக்ரைன் தலைநகர் கீவ் (Kyiv) மற்றும் எரிசக்தி மையங்கள்மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 6 பேர் பலி.
மொத்தமாக 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த அமைதித் திட்டத்தை ஐரோப்பா மாற்றியமைக்க முயன்றதை ரஷ்யா நிராகரித்துள்ளது.
???????? பிரான்ஸ் அரசியல்: ஜோர்டான் பார்தெல்லா அசைக்க முடியாதவரா?
2027 பிரான்ஸ் ஜனாதிபதித் தேர்தலுக்கான கருத்துக் கணிப்புகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தற்போதைய நிலவரப்படி, ஜோர்டான் பார்தெல்லா (Jordan Bardella - RN) தான் மக்களின் முதல் தேர்வாக உள்ளார்.
எதுவாஹ் பிலிப் (Edouard Philippe) அல்லது கேப்ரியல் அட்டால் (Gabriel Attal) என யாரை எதிர்த்துப் போட்டியிட்டாலும், இரண்டாம் சுற்றில் பார்தெல்லா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கணிப்புகள் கூறுகின்றன.
குறிப்பாக, மெலன்சோனை (Mélenchon) எதிர்த்துப் போட்டியிட்டால், பார்தெல்லா 74% வாக்குகளைப் பெறுவார் என்று கணிக்கப்பட்டுள்ளது.
⚖️ நீதிமன்றப் படிகள்: நெஞ்சை உலுக்கும் வழக்குகள்
இன்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நீதிமன்றங்களில் சில முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன:
உடற்கல்வி ஆசிரியர்மீது வழக்கு (Haute-Savoie): இதய நோய் காரணமாக விளையாட்டுக்கு விலக்கு பெற்றிருந்த 12 வயது மாணவன் பாப்டிஸ்ட் (Baptiste), ஓட்டப்பந்தயத்தில் ஈடுபடுத்தப்பட்டதால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் (2020-ல்). மாணவனின் மருத்துவச் சான்றிதழைப் புறக்கணித்ததாகக் கூறப்படும் உடற்கல்வி ஆசிரியர்மீது இன்று விசாரணை நடக்கிறது.
பாலியல் அத்துமீறல் (Paris): பாரிஸ் மழலையர் பள்ளி ஒன்றில் 5 குழந்தைகள் மற்றும் சக ஊழியர்களிடம் அத்துமீறியதாக 35 வயது ஊழியர் ஒருவர் இன்று கூண்டில் ஏற்றப்படுகிறார்.
லிவர்பூல் தாக்குதல் (UK): லிவர்பூல் கால்பந்து அணியின் வெற்றியைக் கொண்டாடிய கூட்டத்தில் காரை ஏற்றி 134 பேரைக் காயப்படுத்திய நபர்மீதான விசாரணையும் இன்று தொடங்குகிறது.
???? விவாதம்: பெண்களுக்குத் தனி ரயில் பெட்டிகள் தேவையா?
பாரிஸ் பிராந்தியப் போக்குவரத்தில் (RER/Metro) பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் அதிகரித்து வருவதால், "பெண்களுக்கு மட்டுமான தனிப் பெட்டிகள்" (Women-only wagons) தேவையா என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
சிலர் இது பாதுகாப்பிற்கு அவசியம் என்கிறார்கள்.
வலேரி பெக்ரெஸ் போன்ற தலைவர்கள், "இது ஒருவகையான பிரிவினைவாதம் (Apartheid)" என்று எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
ஜப்பான், இந்தியா போன்ற நாடுகளில் இந்த முறை ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
???? கிறிஸ்துமஸ் போனஸ் (Prime de Noël): மகிழ்ச்சி அறிவிப்பு!
விலைவாசி உயர்வால் தவிக்கும் மக்களுக்கு ஓர் ஆறுதல் செய்தி. 2025-ம் ஆண்டிற்கான கிறிஸ்துமஸ் போனஸ் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்: €152.45
தம்பதியர் (குழந்தை இல்லை): €228.68
தம்பதியர் (2 குழந்தைகள்): €320.15 இந்தத் தொகையானது குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து மாறுபடும். RSA, ASS போன்ற சலுகை பெறுவோருக்கு இது தானாகவே வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.


